குளிர்காலத்திலும் குளிர் நீரில் குளிக்கும் பழக்கம்; அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா?
Cold Shower in Winter : குளிர்காலம் நெருங்கிக்கொண்டே வருகின்றது, இனி வீட்டில் சூடு தண்ணீர் போடும் வேலை அதிகரிக்க துவங்கும் என்றே கூறலாம்.
Bathing in cold water
குளியல் என்பது மனதிற்கும், உடலுக்கும் சுகாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெரிய அளவில் நன்மைகளை தருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நாளில் ஒரு முறையாவது நல்ல சுகாதாரமான குளியலை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். நம் உடலில் சேருகின்ற தேவையற்ற அழுக்குகள் மற்றும் தொற்றுகளை நீக்க ஒரு நல்ல குளியல் நமக்கு உதவுகிறது. ஆனால் நம்மில் பலர் குளிர்காலங்களில் ஹீட்டர்களை போட்டு வெந்நீரில் குளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்போம்.
ஆனால் அதே நேரம் வெகு சிலர் மட்டுமே குளிர்காலமாக இருந்தாலும் அந்த குளிர் காலத்திலும் சுடுநீரை பயன்படுத்தாமல் குளிர்ந்த நீரிலேயே குளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். உண்மையில் உடம்பு நடுங்க அப்படி குளிப்பதால் சில நன்மைகளும் இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி அதனால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
இனியும் வெறும் டீயா? செம்பருத்தி டீ வாரி வழங்கும் நன்மைகள்!!
bathing in winter
ரத்த ஓட்டம் சீராகும்
இப்படி குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்குமாம். உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்தாலே உடல் உறுப்புகள் சிறப்பான வகையில் செயல்பட தொடங்கும். ஆனால் குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது ஜலதோஷம் இருமல் போன்ற சில விஷயங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற பயம் இருக்கலாம். ஆனால் குளிர்ந்த நீரில் குளிர்காலத்தில் குளித்து பழகியவர்களுக்கு அது பல வகையில் நன்மை பயக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். அடிக்கடி இல்லை என்றாலும் வாரம் ஒரு முறையாவது இதை செய்து பார்ப்பது நல்லது.
chill water bath
சுறுசுறுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி
தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் சருமத்தை ரிலாக்ஸ் செய்யுமாம். மேலும் உங்கள் சுவாசத்தின் வேகமும் இதனால் அதிகரிக்கும். இதன் காரணமாக, உடல் அதிக ஆக்ஸிஜனை உட்கொள்ளத் தொடங்குகிறது, அதுவே சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. அதேபோல குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. அதாவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாக அதிகரிக்கும். குளிர்காலத்தில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு எதிராக போராடும் திறனை இது அதிகரிக்கிறது.
benefits of chill water bath
தோல் மற்றும் முடி ஆரோக்கியம்
வெந்நீரைக் காட்டிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் தலைமுடியில் உள்ள அதிகப்படியான எண்ணெய், தூசி மற்றும் அழுக்குகளை அகற்றும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் குளிர்ந்த நீர் குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை வறண்டு போகாமல் இருக்க உதவுகிறது. இது உங்கள் முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
தசை வலியிலிருந்து நிவாரணம்
தசைவலி இருப்பவர்கள் குளிர்காலத்தில் குளிர் நீரில் குளிப்பது நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் தசை வலியைப் போக்க உதவுகிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் தசைகளை தளர்த்துகிறது மற்றும் தசை வலியைக் குறைக்கிறது.
10 வயதுக்குள் உங்க குழந்தைக்கு கட்டாயம் 'இதை' கற்று கொடுங்க!!