தலைமுடிக்கு மஞ்சள் செய்யும் நன்மை.. தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Turmeric For Hair : தலைமுடிக்கு மஞ்சள் மிகவும் நன்மை பயக்கும் அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்?
தலைமுடிக்கு மஞ்சள் செய்யும் நன்மை.. தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
மஞ்சள் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மசாலா பொருளாகும். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதிலிருக்கும் குர்குமின், ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஆன்டி-செப்டி பண்புகள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது சமையலுக்கு மட்டுமின்றி சருமத்தின் அழகை அதிகரிக்க அதிகரிக்கவும் பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் மஞ்சளை நம்முடைய தலைமுடிக்கும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மஞ்சளை தலை முடிக்கு பயன்படுத்துவதால் பொடுகு தொல்லை, உச்சந்தலை வீக்கம் போன்ற பல கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்தும் மற்றும் தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும். எனவே இப்பொழுது மஞ்சள் தலைமுடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
மஞ்சளை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
- மஞ்சளை தலைமுடிக்கு பயன்படுத்தினால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் தலைமுடிக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இதன் மூலம் முடி உதிர்தல், முடி உடைதல், நரைத்தல் போன்ற முடி தொடர்பான ஒவ்வொரு பிரச்சினைகளிலிருந்தும் விடுபடுவீர்கள்.
- உங்கள் தலைமுடி சீக்கிரமாகவே நரைத்தால் மஞ்சளை பயன்படுத்துங்கள். இதில் இருக்கும் குர்குமின் வெள்ளை முடி பிரச்சனையை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- நீங்கள் பொடுகு பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்கள் தலைமுடிக்கு மஞ்சளை பயன்படுத்துங்கள். ஏனெனில் மஞ்சளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகு பிரச்சனையில் இருந்து உங்களை விடுவிக்கும்.
- மஞ்சளில் இருக்கும் கலவைகள் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் மற்றும் முடியின் முனைகளில் பிளவுகள் ஏற்படுவதையும் தடுக்கும்.
- உச்சந்தலையில் வீக்கம் இருந்தால் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் மஞ்சள் உதவியாக இருக்கும். ஏனெனில் மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
தலைமுடிக்கு மஞ்சளை பயன்படுத்தும் முறை:
ஒன்று..
இதற்கு 2 முட்டை தேன் மற்றும் மஞ்சள் தூள் எடுத்து நன்றாக கலக்கவும். பின் அது உங்கள் தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து தலைமுடிக்கு ஷாம்பு போட்டு குளிக்கவும். இதனால் தலை முடி பிரச்சனை நீங்கும் மற்றும் முடியின் பொலிவை அதிகரிக்கும்.
இரண்டு..
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் கலந்து அதை தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்து பிறகு ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு தொல்லை இருக்காது. தலைமுடியும் நீளமாக வளர உதவும்.
இதையும் படிங்க: முடி கருகருனு வளர கருஞ்சீரக எண்ணெய்.. தயாரிப்பது எப்படி?
தலைமுடிக்கு மஞ்சள் நன்மைகள்
மூன்று..
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், கால் கப் தயிர் ஆகியவற்றை நன்றாக கலந்து அதை தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும் இதனால் முடியின் பளபளப்பு அதிகரிக்கும். இந்த மஞ்சள் ஹேர் மாஸ்குடன் நீங்கள் தேன் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
நான்கு..
கால் கப் தேங்காய் எண்ணெயை சூடாக்கி இறக்கும்போது அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பிறகு உங்கள் தலைமுடியில் இரவு தூங்கும் முன் தடவி, மறுநாள் காலை ஷாம்பு போட்டு குளித்தால், வறண்டு முடி மென்மையாகும்.
இதையும் படிங்க: முடி உதிர்வுக்கு உணவும் காரணம்.. அடர்த்தியாக முடி வளர '7' உணவுகள்..