QR Code: 90% பேருக்குத் தெரியாத QR Code ரகசியம்! அந்த 3 கட்டங்கள் எதுக்கு தெரியுமா?
ஆன்லைன் பேமெண்ட்களில் நாம் பரவலாகப் பயன்படுத்தும் QR கோடில், மூன்று மூலைகளில் மட்டும் கட்டங்கள் இருக்கும். இந்த மூன்று கட்டங்களின் வேலை என்ன? நான்காவது மூலையை ஏன் காலியாக விட்டிருக்கிறார்கள்?
15

Image Credit : Asianet News
கட்டத்தில் உள்ள ரகசியம்
இன்றைய டிஜிட்டல் உலகில், ஆன்லைன் பேமென்ட் செய்யாதவர்களே இல்லை. இதில் QR கோடு முக்கிய பங்கு வகிக்கிறது. பேமென்ட் மட்டுமல்லாமல், ஆப் டவுன்லோடு, ஹாட்ஸ்பாட் ஷேரிங் என பல இடங்களில் QR கோடு பயன்படுகிறது. நீங்கள் எந்த QR கோடைப் பார்த்தாலும், அதில் மூன்று மூலைகளில் மட்டும் கட்டங்கள் இருக்கும். அந்த மூன்று கட்டங்களின் அர்த்தம் என்னவென்று பார்க்கலாம் வாங்க.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Getty
கட்டங்களின் வேலை இதுதான்.!
QR கோடின் மூன்று மூலைகளில் இருக்கும் இந்த கட்டங்களுக்கு 'ஃபைண்டர் பேட்டர்ன்' (Finder Pattern) என்று பெயர். ஸ்கேனர் அல்லது ஸ்மார்ட்போன் கேமராவுக்கு, QR கோடு எங்கே தொடங்குகிறது, அதன் டைரக்ஷன் என்ன என்பதைக் காட்டுவதுதான் இந்த கட்டங்களின் வேலை.
35
Image Credit : Getty
அந்த நான்காவது கார்னர்.!
நமது கேமரா ஒரு QR கோடை ஸ்கேன் செய்யும்போது, முதலில் இந்த மூன்று கட்டங்களைத் தான் தேடும். கோடு நேராக இருக்கிறதா, தலைகீழாக இருக்கிறதா, எந்த ஆங்கிளில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க இந்த கட்டங்கள் உதவுகின்றன. ஒருவேளை நான்கு மூலைகளிலும் கட்டம் இருந்தால், ஸ்கேனருக்கு கோடின் ஆங்கிளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிவிடும்.
45
Image Credit : AI
பிழைத்திருத்தம் செய்யும் பேட்டர்ன்கள்
QR கோடில் உள்ள மூன்று 'ஃபைண்டர் பேட்டர்ன்' மூலமாகவே ஸ்கேனிங் சுலபமாகிவிடுகிறது. எந்த மூலை காலியாக இருக்கிறதோ, அதை வைத்துதான் QR கோடின் சரியான நிலையை (orientation) ஸ்கேனர் முடிவு செய்யும். அதனால், காலியாக இருக்கும் நான்காவது மூலை ஒன்றும் வீண் கிடையாது. அந்த இடத்தில் சின்ன சின்ன டேட்டா பேட்டர்ன், பிழை திருத்தம் (error correction) போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் இருக்கும். இதனால்தான் சில சமயம் QR கோடு லேசாக கிழிந்திருந்தாலும் சரியாக வேலை செய்கிறது.
55
Image Credit : Asianet News
நம்பகமான தொழில்நுட்பம்
QR கோடில் உள்ள 'ஃபைண்டர் பேட்டர்ன்' ஒரு நம்பகமான தொழில்நுட்பமாகக் கருதப்படுகிறது. நீங்கள் எந்த ஆங்கிளில் இருந்து ஸ்கேன் செய்தாலும் இது வேலை செய்யும். இந்த டெக்னாலஜி வேகமான ஸ்கேனிங், நல்ல அனுபவம் மற்றும் பாதுகாப்பைக் கொடுக்கிறது. பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், QR கோடு அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

