MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நல்ல பெற்றோர் 'இத' பண்ணமாட்டாங்க.. குழந்தை வளர்ப்பில் செய்யக்கூடாத '5' தவறுகள்!! 

நல்ல பெற்றோர் 'இத' பண்ணமாட்டாங்க.. குழந்தை வளர்ப்பில் செய்யக்கூடாத '5' தவறுகள்!! 

 Parenting Mistakes : குழந்தை வளர்ப்பில் பெற்றோர் தவறுதலாக கூட செய்யக்கூடாத ஐந்து தவறுகளை இந்த பதிவில் காணலாம். 

3 Min read
Author : Kalai Selvi
Published : Dec 31 2024, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Parenting Tips in Tamil

Parenting Tips in Tamil

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  ஏனென்றால் குழந்தைகளுடைய சிறுவயது அனுபவம் அவர்களுடைய எதிர்கால நடத்தையில் பிரதிபலிக்க கூடும்.  பெற்றோர் தங்களுடைய அணுகுமுறையில் கவனமாக இருப்பதற்கு இது ஒரு அவசியமான காரணமாகும். குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் பெற்றோர் தங்களுடைய நடத்தையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.  அவர்களுடைய ஆளுமை குழந்தைகளிடத்தில் பிரதிபலிக்கும். பெற்றோரை முன்மாதிரியாகக் கொண்டுதான் குழந்தைகள் வளருவார்கள். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு, கல்வி உடை போன்றவற்றை கொடுப்பது மட்டும் பெற்றோரின் கடமை கிடையாது. அதைத் தாண்டி அவர்களுடைய நடத்தையை முறையாக கவனிப்பதும் மாற்றுவதும் பெற்றோரின் கடமையாகும். குழந்தைகளின் ஒளிமயமான  எதிர்காலத்திற்கு பெற்றோர் செய்யவே கூடாத ஐந்து தவறுகளை இந்த பதிவில் காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Parenting Mistakes To Avoid In Tamil

Parenting Mistakes To Avoid In Tamil

எல்லா பெற்றோருமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் வித்தியாசமான முறைகளில் தங்களுடைய குழந்தைகளை வளர்கிறார்கள். கண்டிப்பான பெற்றோர் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க விதிமுறைகளை பழக்கப்படுத்துகின்றனர். மென்மையான பெற்றோர் குழந்தைகளுடைய போக்கிலேயே அவர்களை திருத்தி வழிநடத்து முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய தனிப்பட்ட அனுபவம் மற்றும் அவர்களுக்கு தெரிந்த தகவல்களின் மூலம் குழந்தைகளை வழி நடத்துகிறார்கள். ஆனால் பெற்றோருடைய சில நடத்தைகள் குழந்தைகளுக்கு கெடுதலாக அமையும். குழந்தை வளர்ப்பு முறையில் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை, இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க:  குழந்தைகளை மனதளவில்  வலிமையாக மாத்தனுமா? சூப்பர் பெற்றோருக்கு '5' டிப்ஸ்

35
Common parenting mistakes in tamil

Common parenting mistakes in tamil

கண்டிப்பும் மென்மையும்! 

கண்டிப்பும், மென்மையும் ஒருசேர பெற்றோரிடத்தில் இருக்க வேண்டிய குணங்களாகும். பெற்றோரில் இருவருமே குழந்தைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் கண்டிப்பாக நடந்து கொண்டால் மற்றொருவர் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் மென்மையான பெற்றோராக இருக்க வேண்டும்.  பெற்றோரின் இந்த நடத்தை குழந்தைகளுக்கு சமநிலையை அளிக்கிறது. குறிப்பாக இந்த விஷயத்தில் பெற்றோர் ஒரு டீம் போல செயல்பட வேண்டும்.  இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அதே சமயத்தில் குழந்தைகளிடத்தில் கண்டிப்பாகவும், மென்மையாகவும் நடப்பதில் தங்களுடைய பணிகளை புரிந்து கொள்ள வேண்டும். இப்படி புரிதலை பெற்றோருக்குள் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருவரும் கண்டிப்புடன் அல்லது இருவரும் மென்மையான பெற்றோராக இருக்கும்போது குழந்தைகளுக்கு சில பொறுப்புகளை கற்பிக்க முடியாமல் போய்விடும். 

அந்நிய நடத்தை: 

குழந்தைகளுடைய கேள்விகள், அவர்களுடைய தேவைகள் போன்றவற்றை பெற்றோர் தொடர்ந்து நிராகரித்தால் அல்லது நிறைவேற்றாமல் தவிர்த்தால் அவர்களை அந்நியப்படுத்தும் பெற்றோர் என சொல்கிறார்கள். இந்த பெற்றோர் குழந்தைகளுக்கு எதையும் செய்யாமல் இருப்பார்கள். பெற்றோரின் இந்த பொறுப்பற்ற நடத்தை குழந்தைகளை தனிமையிலும் ஏக்கத்திலும் தள்ளிவிடும்.  

45
Parenting tips and advice in tamil

Parenting tips and advice in tamil

ஹெலிகாப்டர்' வளர்ப்பு முறை:  

ஹெலிகாப்டர் பேரன்டிங் (Helicopter Parenting) என்பது குழந்தை வளர்ப்பு முறையில் ஒன்று. இந்த வளர்ப்பு முறையில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது அதிகமாக கவனம் செலுத்துவார்கள். இதனால் அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் நுண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக அதிகமாக செலவு செய்வது, அதற்காக கடன் வாங்குவது என குழந்தைகளை சுற்றியே அவர்களுடைய உலகம் இயங்கும். இதனால் குழந்தைகள் நல்லபடியாக வளருவார்கள் என பெற்றோர் நம்புகின்றனர். இது எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான விளைவுகளை கொடுக்கும் என சொல்லி விட முடியாது. குழந்தைகளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருப்பதால் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

ரட்சக மனப்பான்மை கொண்ட  பெற்றோர்: 

ஹெலிகாப்டர் பெற்றோர் போலவே இரட்சக மனப்பான்மையுள்ள பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே தீங்கு  செய்கிறார்கள். தங்கள் குழந்தைகள் எந்த தவறும் செய்யக்கூடாது என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வதால் அவர்கள்  குழந்தைகளை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைத்து விடுகிறார்கள். குழந்தைகளின் அனைத்து வேலைகளையும் பெற்றோரே முடித்து விடுவதால் குழந்தைகளுக்கு பொறுப்பெடுத்துக் கொள்ளும் திறன் இல்லாமல் போய்விட வாய்ப்புள்ளது. 

55
Mindful parenting in tamil

Mindful parenting in tamil

தண்டனை அளித்தல்: 

குழந்தைகள் செய்யும் சிறிய தவறுகளுக்கு கூட உடனே தண்டனை வழங்கும் போக்கு பெற்றோரிடத்தில் காணப்பட்டால் அது தவறாகும். இந்த மாதிரியான பழக்கத்தால் குழந்தைகளுடைய மனநலமும் பாதிக்கப்படுகிறது.   அவர்களிடையே ஒரு அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் நேர்மையாக இல்லாமல் பொய் சொல்லக் கூடும்.  உங்களிடம் உண்மையை சொல்ல அவர்களுக்கு தைரியம் இல்லாத போக்கும் காணப்படும். 

நீங்கள் குழந்தை வளர்ப்பில் ஒருபோதும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களை செய்யாமல் குழந்தைகளை புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருக்கவும் முயற்சி செய்யுங்கள். ஒரு நல்ல பெற்றோர் தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த இதை நிச்சயமாக கடைபிடிப்பர்.

இதையும் படிங்க:  நீங்க எப்படிப்பட்ட பெற்றோர்? இந்த '5' விஷயங்களை வெச்சு தெரிஞ்சுக்கோங்க!! 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
PS-WPS-W
(12.3 ov)97/4
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(34.5 ov) 98 & 111/4
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Shopping Mistakes: அதிகம் துணி வாங்கி குவிக்கும் பழக்கம் உள்ளவர்களா? அப்போ ஷாப்பிங்கில் நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ!
Recommended image2
காரணமின்றி அதிக சோர்வு, எரிச்சல் வருகிறதா? இது ரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
Recommended image3
Saree Maintaining Tips: புடவை ஆயுசுக்கும் புதுசா இருக்கும்... பெண்களுக்கே தெரியாத 10 புடவை ரகசியங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved