கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்தியாவில் இந்த 3 இடத்துக்கு போக முடியாது; ஏன் தெரியுமா?
இந்தியாவில் கோடி ரூபாய் கொடுத்தாலும் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட 3 இடங்கள் உள்ளன. அவற்றின் விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Tourist Places in india
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்தியா பல்வேறு மொழிகள், பல்வேறு உணவு, உடைகள் பல்வேறு மதங்கள் என பன்முக கலாச்சாரங்களை கொண்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அழகிய கடற்கரைகள், எழில் கொஞ்சும் வனங்கள், பிரமிப்பூட்டும் மலைத்தொடர்கள் என பாரத தேசத்தில் அழகுக்கு பஞ்சமில்லை.
நாம் நாடு முழுவதும் இயற்கை அழகை கண்டுரசிக்க, சுற்றுலா தலங்களுக்கு செல்ல எந்தவித தடையும் இல்லை; கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் இந்தியாவில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நாம் செல்ல முடியாத 3 இடங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? அவற்றைபற்றிதான் உங்களுக்கு இப்போது கூறப்போகிறேன்.
பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
இந்தியாவின் முதன்மையான அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி மையம், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அமைந்துள்ளது. நாட்டின் பிரதமரால் நேரடியாகக் கண்காணிக்கப்படும் அணுசக்தித் துறையின் (DAE) கீழ் இது செயல்படுகிறது. இங்கு பல்வேறு அணு அலைகள் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Tourist Places in Jammu and kashmir
அணுக்கரு எரிபொருள் சுழற்சி, எதிர்காலத்துக்கு தேவையான நவீன அணுக்கரு ஆற்றல் அமைப்புகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றல், அதிநவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் இந்தியாவில் பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்ட இடங்களில் ஒன்றாக இது உள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
வடக்கு சென்டினல் தீவு (North Sentinel Island)
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபர் தீவுகளில்தான் வடக்கு சென்டினல் தீவு அமைந்துள்ளது. சுமார் 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சென்டினல் தீவில் சென்டினலீஸின் என அழைக்கப்படும் உள்ளூர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். டிவி, செல்போன், மின்சாரம் என ஏதுமில்லாமல் வெளியுலகத் தொடர்புகள் சுத்தமாக இல்லாமல் இந்த சென்டினலீஸின் மக்கள் தனித்தன்மையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
Visiters Banned Places
இங்குள்ள பழங்குடியின மக்களை பாதுகாக்கவும், வெளியுலகில் இருந்து அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கவும் வடக்கு சென்டினல் தீவுக்கு செல்ல இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி சட்டவிரோதமாக சென்டினலுக்கு செல்லும் வெளியாட்களை சென்டினல் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. கடந்த 2028ம் ஆண்டு சென்டினல் தீவுக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த 26 வயதான ஜான் சாவ் என்பவர் பிணமாக மீடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெளியாட்களை விரும்பாத சென்டினல் மக்கள் அவரை கொன்றதாக கூறப்படுகிறது.
Budget Tourist Places
பாங்கோங் சோ ஏரி (Pangong Tso)
ஜம்முகாஷ்மீரின் லடாக்கில் மிகப்பெரும் பரப்பளவில் பாங்கோங் சோ ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி லடாக்கின் லே பகுதியில் இருந்து சீன எல்லை வரை நீண்டுள்ளது. பிரம்மாண்டமான இயமலையின் பின்னணியில் ஜில்லென்ற பகுதியில் இந்த ஏரியை பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். இந்த ஏரியின் சில பகுதிகளில் சீன எல்லைக்கு மிக அருகில் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.