Trending saree : சோஷியல் மீடியாவை கலக்கும் டாப் 10 புடவைகள்..உங்க ஃபேவரிட் எது?
Social media Trending saree: புடவைகள் சோஷியல் மீடியாவிலும் புதிய அவதாரம் எடுத்துள்ளது. நடிகைகள், இன்ஃப்ளூயன்சர்கள், ஃபேஷன் பிரியர்கள் அணியும் வித்தியாசமான புடவைகள் வைரலாகி வருகின்றன. அவ்வாறு ட்ரெண்டாகி வரும் டாப் 10 புடவைகளை இங்கே பார்க்கலாம்.

பச்சை – நீல நிற டிஷ்யூ புடவை
பச்சை மற்றும் நீல நிறங்களின் டூயல் டோனில் அமைந்த டிஷ்யூ புடவை, பாரம்பரியத்துடன் ஃபேஷனை இணைத்து பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிஷ்யூ துணியின் மென்மையான பளபளப்பு, இந்த புடவைக்கு ரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.
செட்டிநாடு காட்டன் Coffee Brown புடவை
சோசியல் மீடியாவில் பாரம்பரிய புடவை டிரெண்டில், செட்டிநாடு காட்டன் புடவைகள் தனித்துவமான நிறங்களாலும், எளிமையான தோற்றத்தாலும் பெண்களின் மனதை கவர்ந்துள்ளது. இந்த புடவைகள் பாரம்பரிய செட்டிநாடு நெசவின் அழகையும், நவீன ஃபேஷன் தோற்றத்தையும் தருவதால் மக்கள் இதை அதிகளவில் விரும்புகின்றனர். காபி பிரவுன் நிறம் மற்றும் கான்ட்ராஸ்ட் பார்டர்கள் இந்த புடவைக்கு தனித்துவமான கம்பீரத்தை வழங்குகிறது.
VTV திரிஷா புடவை
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷா அணிந்த புடவை, இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படும் எவர்கிரீன் ஃபேஷன் லுக்காகவே பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஜெஸ்ஸியாக திரிஷா அணிந்த மரூன்–பச்சை நிற புடவை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, ‘VTV திரிஷா புடவை’ என்ற பெயரில் பிரபலமாக உள்ளது.
தெலங்கானா நாராயண்பேட் புடவை
நாராயண்பேட் புடவைகள் தெலங்கானா மாநிலத்தின் நாராயண்பேட் (Narayanpet) பகுதியில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கைத்தறி புடவைகளாகும். இந்த புடவையில் உள்ள கோடுகள் மற்றும் கட்டம் போன்ற டிசைன்கள் இந்த புடவைகளுக்கு கூடுதல் அழகை கொடுக்கிறது. மேலும் இந்த புடவையின் பார்டரில் வரும் யானை, மயில், கோயில் கோபுரங்கள் போன்ற வடிவங்களும், துணியின் தன்மையும் இந்த புடவையை வாங்குவதற்கு காரணமாக அமைகிறது.
ரஸ்ட் ஆரஞ்சு காபி-பிரவுன் புடவை
ரஸ்ட் ஆரஞ்சுடன் காபி பிரவுன் பார்டர் இணைந்து இந்த புடவையின் பாரம்பரிய அழகை வெளிப்படுத்துகிறது. திருமணம், நிச்சயதார்த்தம், குடும்ப விழாக்கள், பண்டிகை நாட்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த புடவை சிறப்பான தேர்வாக அமைந்துள்ளது. இந்த புடவையை பெண்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் காட்டன் புடவை
மென்மையான வெந்தயம் நிறத்துடன் கருப்பு நிற பார்டர் இணைந்த காஞ்சிபுரம் காட்டன் புடவை, எளிமையிலும் கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. இது உடுத்துவதற்கு எளிமையாக இருப்பதால் பெண்கள் இதனை விரும்பி வாங்கி வருகின்றனர். திருமணம், கோவில் நிகழ்ச்சிகளில் இந்த புடவையை கட்டினால் பாரம்பரியமான ஸ்டைலிஷ் லுக்கைப் பெறலாம்.
திரிஷா நீல நிற புடவை
முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷா கட்டியிருந்த நீல நிற புடவை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து இந்த புடவையை பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைனில் வாங்கி வருகின்றனர். பல்வேறு துணி கடைகளிலும் இந்த புடவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மகேஸ்வரி காட்டன் புடவை
மகேஸ்வரி காட்டன் புடவை மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மகேஷ்வர் நகரில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் மென்மையான கைத்தறி புடவையாகும். இந்த புடவைகள் லேசான எடை கொண்டதாகவும், உடுத்துவதற்கு எளிதாக உள்ளதால் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர்.
காஞ்சிபுரம் பட்டுப் புடவை
மென்மையான வெங்காய நிறத்திற்கு கருப்பு பார்டர் கான்ட்ராஸ்டாக இருப்பது புடவையின் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகிறது. இந்த புடவையை பெண்கள் ஆன்லைனில் உனக்கு எனக்கு என்று போட்டி போட்டு வாங்குகின்றனர்.
காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவை
காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவைகள் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தூய mulberry பட்டு மற்றும் தங்கம்-வெள்ளி ஜரியால் கைத்தறியால் நெசவு செய்யப்படும் புகழ்பெற்ற பாரம்பரிய உடையாகும். இந்த பச்சை நிற புடவை மற்றும் மெஜந்தா நிற பார்டர் பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது.

