MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் முதலும், கடைசியும் இருப்பது ஏன்? அதன் பின்னணியில் இப்படி ஒரு மேட்டர் இருக்கா!

ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் முதலும், கடைசியும் இருப்பது ஏன்? அதன் பின்னணியில் இப்படி ஒரு மேட்டர் இருக்கா!

Unknown Facts of Unreserved Coaches : ரயிலில் பொதுவாகவே முன்பதிவில்லா பெட்டிகள் முதலிலும் கடைசியிலும் இடம்பெற்று இருக்கும், அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 18 2024, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Train

Train

ரயில் பயணம் என்பது எப்போதுமே தனிச்சிறப்பு தான். ரயிலில் ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்சில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் முன்பதிவில்லா பெட்டியில் தான் பயணிக்க முடியும். அந்த பெட்டியில் பயணிக்க டிக்கெட் விலையும் கம்மி அதுமட்டுமின்றி அதில் இடம்பிடிக்க கடும் போட்டி இருக்கும். பண்டிகை நாட்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் நின்று செல்ல கூட இடம் இருக்காது. அந்த அளவுக்கு கூட்டம் எக்குத்தப்பாக இருக்கும். இப்படி அதிக கூட்டம் வந்தாலும் முன்பதிவில்லா பெட்டிகளை ரயிலில் அதிகரிக்க மாட்டார்கள்.

25
Indian Railways

Indian Railways

அதுமட்டுமின்றி ரயிலில் மொத்தமே இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் தான் இருக்கும். அதில் ஒரு பெட்டி எஞ்சினுக்கு அடுத்தபடியாகவும், மற்றொரு பெட்டி ரயிலின் கடைசி பெட்டியாகவும் இடம்பெற்று இருக்கும். இப்படி முன்பதிவில்லா பெட்டி முதலும் கடைசியுமா இருப்பது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா. 

இதையும் படியுங்கள்... RAC டிக்கெட்ட கேன்சல் பன்னா பணம் வரலயா? இத செய்யுங்க பணம் கன்பார்ம்!!

35
Train unreserved coaches

Train unreserved coaches

இதுபற்றி சமூக வலைதளங்களில் விவாதம் நடந்தபோதுகூட பெரும்பாலானோர் சொன்ன பதில் என்ன தெரியுமா, ஏதேனும் விபத்து நடந்தால் முதலில் இருக்கும் பெட்டி தான் அதிகம் டேமேஜ் ஆகும், அதில் அதிகம் பயணிப்பது ஏழை மக்கள் தான். அவர்கள் உயிர்மேல் ரயில்வே நிர்வாகத்துக்கு எந்த அக்கறையும் இல்லாததால் தான் முன்பதிவில்லா பெட்டிகளை முதலும் கடைசியும் வைத்திருக்கிறார்கள் என நிறைய பேர் கூறி இருந்தார்கள்.

45
Train Facts

Train Facts

ஆனால் இதற்கு ரயில்வே தந்த விளக்கமே வேற ரகம் என்றே சொல்லலாம். முன்பதிவில்லா பெட்டிகளில் நிறைய பேர் பயணிப்பார்கள். அதனால் மற்ற பெட்டிகளோடு ஒப்பிடுகையில் அந்த முன்பதிவில்லா பெட்டிகள் மட்டும் அதிக வெயிட் உள்ளதாக இருக்கும். ரயிலின் முதல் பெட்டியும், கடைசி பெட்டியும் அதிக வெயிட்டோடு இருந்தால் எடைப் பகிர்வு சம்மாக இருக்கும். 

55
Unknown Facts of Unreserved Coaches

Unknown Facts of Unreserved Coaches

ஒருவேளை நடுவில் முன்பதிவில்லா பெட்டிகளை வைத்து அங்கே எடை அதிகமாகிவிட்டால் ரயில் தடம் புரள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்குமாம். இதன் காரணமாக தான் ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகளை முதலும் கடைசியுமாக வைத்துவிட்டு, ஏசி, ஸ்லீப்பர் கோச்சுகளை இடையே வைத்திருக்கிறார்கள். 

இதையும் படியுங்கள்... மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. ரயில் டிக்கெட்டை பதிவு செய்தால் போதும்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
இந்திய இரயில்வே
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் இந்திய அஞ்சல் துறை..! 24 மணி நேரத்தில் டெலிவரி..
Recommended image2
LPG Cylinder: கேஸ் சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி வரலையா? டீலர் அதிக காசு கேட்கிறாரா? இத பண்ணுங்க போதும்!
Recommended image3
12 நாட்களில் 7 புண்ணியத் தலங்கள்! IRCTC வழங்கும் மெகா ஜியோதிர்லிங்க யாத்திரை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved