MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Water Warriors of India : நீர் மேலாண்மையை ஊக்கப்படுத்தும் இந்தியாவின் தண்ணீர் காவலர்கள்!

Water Warriors of India : நீர் மேலாண்மையை ஊக்கப்படுத்தும் இந்தியாவின் தண்ணீர் காவலர்கள்!

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் 21 மாநிலங்களில் தண்ணீர் முற்றிலும் வற்றிப்போகும் அபயாம் உள்ளதாக தெரிவிதுள்ளது. குறிப்பிட்ட நகரங்களில் கிடைத்து வரும் 70% அசுத்தமான தண்ணீரும் வற்றிவரும் நிலையில் விரைவில் ஜூரோ நாள் நிலையை அடைக்கூடும் என எச்சரித்துள்ளன. நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்டு வரும் 10 தண்ணீர் காவலர்களை (வாட்டர் வாரியர்கள்) பற்றி இங்கு காண்போம். 

2 Min read
Dinesh TG
Published : Aug 06 2022, 09:44 AM IST| Updated : Aug 06 2022, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ராஜேந்திர சிங்

ராஜேந்திர சிங்

வறட்சி மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கையான ஒன்று என்று ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் பிறந்தவர் ராஜேந்திர சிங். அரசு வேலையை 1984-ல் ராஜினாமா செய்த அவர், ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் ஒரு கிராமத்துக்குச் சென்று ஆயுர்வேத மருத்துவ சேவையாற்றினார். கல்வியும் கற்பித்தார்.

அந்த ஊருக்குப் படிப்பு, மருத்துவத்தைவிட தண்ணீர்தான் முக்கியம் என்பதை உணர்ந்த ராஜேந்திரசிங், அந்த ஊர்க் குளத்தை தன்னந்தனி ஆளாக தூர்வாரினார். ஆண்டுக்கணக்கில் பாடுபட்டு குளத்தின் பரப்பளவை அதிகரித்தார். பிறகு பெய்த திடீர் மழையால் குளம் நிரம்பியது. பின்னர் இளைஞர்களை ஒன்றுதிரட்டி அடுத்த ஒரே ஆண்டில் 36 கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன. கிராமம் கிராமமாக பாத யாத்திரை சென்று, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ராஜஸ்தான் மாநிலத்தில் 7 நதிகளை மீட்டெடுத்தார். இவரது வழிகாட்டுதலால் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர்ப் புரட்சி உருவாகியுள்ளது.

தண்ணீர் மனிதன்’ என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங், உலக அளவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும், ‘ஸ்டாக்ஹோம் நீர் பரிசு’ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

23
ஆம்லா ரூயா

ஆம்லா ரூயா

உத்திரபிரதேசத்தில் பிறந்தவர் தான் அமலா ரூயா. இவர் தண்ணீர் தாய் என அழைக்கப்படுகிறார். இவர் 1998-ல் ராஜஸ்தானில் ஏற்பட்ட வறட்சியை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அங்கு Aakar Charitable Trust என்னும் தொண்டு நிறுவனத்தை உருவாக்கிய அவர், அதன் மூலம் முற்றிலும் தண்ணீர் பெற இயலாத கிராமங்களுக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

ஆம்லாவின் தொண்டு நிறுவனம் 2006 முதல் 2018 வரையிலாக காலகட்டத்தில் 317 அணைகளைக் கட்டியுள்ளது. இதனால் ராஜஸ்தானில் இருக்கும் 182 கிராம வாசிகள் நேரடியாக பயன்பெறுகின்றனர். இந்த தொண்டு நிறுவனம் ராஜஸ்தான் மக்களின் கல்வி செலவுகளுக்கும் உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

33
அய்யப்பா மசாகி

அய்யப்பா மசாகி

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் இந்த அய்யப்ப மசாகி. இவர், தண்ணீர் காந்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

கர்நாடகத்தின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அய்யப்ப மசாகி. கர்நாடக மாநிலத்தில் பெய்யும் மழையில், பாதி நீர் கடலில் கலந்து வீணாகிறது என்றார். பின்னர், தான் கண்பிடித்த நீர் சேகரிப்பு முறைகளால் மக்களின் தண்ணீர் பஞ்சம் போக்க முயன்றவர் இவர். இதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அய்யப்ப மசாகி இணைந்து செயல்படும் வாட்டர் லிட்டரசி பவுண்டேஷன் அமைப்பு பதினான்கு மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 4500 இடங்களுக்கு மேல் நீராதாரத்திற்கான பணி திட்டங்களை செயல்படத்தியுள்ளது.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved