MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இன்றைய TOP 10 செய்திகள்: வக்பு தீர்ப்பு முதல் வைஷாலியின் வெற்றி வரை!

இன்றைய TOP 10 செய்திகள்: வக்பு தீர்ப்பு முதல் வைஷாலியின் வெற்றி வரை!

இன்றைய TOP 10 செய்திகளில்… உச்சநீதிமன்றம் வக்ஃபு சட்டத் திருத்தம் தொடர்பான தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். பீகாரில் SIR நடைமுறை குறித்து உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 Min read
SG Balan
Published : Sep 15 2025, 11:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
வக்ஃபு சட்டத் திருத்தம்
Image Credit : our own

வக்ஃபு சட்டத் திருத்தம்

வக்ஃபு சட்ட திருத்தத்தை எதிர்த்து செய்யபட்ட ரிட் மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தலைமையிலான விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே 22-ஆம் தள்ளி வைத்ததது. இந்நிலையில், வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. சட்டத்தின் சில விதிகளை செயல்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

210
அமித் ஷாவுக்கு மெசேஜ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி..!
Image Credit : Asianet News

அமித் ஷாவுக்கு மெசேஜ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி..!

நாளை டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லி மேலிடம் ஒருங்கிணைந்த அதிமுக குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், "என்னை யாராலும் மிரட்ட முடியாது. கட்சிக்காக உழைக்கிறவங்கள தான் அனுசரிச்சு போக முடியும். சில பேரு அதிமுகவ அடமானம் வைக்க பாக்குறாங்க. அதிலிருந்து காப்பாத்த அனைவரும் துணிந்சு நிக்கணும். அதிமுகவுக்கு துரோகம் செய்றவங்க நடு ரோட்டில நிப்பாங்க. தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா. அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்’’ என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Articles

Related image1
விளையாடவே மாட்டோம்! விரக்தியில் பாகிஸ்தான் அணி எடுத்த திடீர் முடிவு!
Related image2
பிறந்த 15 நாளில் புதைக்கப்பட்ட குழந்தை... கதறல் கேட்டு மீட்ட கிராம மக்கள்!
310
SIR நடைமுறை - உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
Image Credit : social media

SIR நடைமுறை - உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு அடையாள மற்றும் பதிவு (SIR) நடைமுறையில் சட்டவிரோதமான முறைகள் கண்டறியப்பட்டால், ஒட்டுமொத்தப் பணியும் ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இறுதி விசாரணை அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெறும்.

410
அமெரிக்காவில் இந்தியர் படுகொலைக்கு டிரம்ப் கண்டனம்
Image Credit : Asianet News

அமெரிக்காவில் இந்தியர் படுகொலைக்கு டிரம்ப் கண்டனம்

டல்லாஸில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் நாகமல்லையா தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குடும்பத்தினர் கண் முன்னே நடந்ததாக கூறப்படுகிறது. அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பைடனின் குடியேற்றக் கொள்கைகளைக் கண்டித்துள்ளார்.

510
கிராண்ட் சுவிஸ் சாம்பியன் வைஷாலி!
Image Credit : Social media

கிராண்ட் சுவிஸ் சாம்பியன் வைஷாலி!

இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலி, சாமர்கண்டில் நடைபெற்ற ஃபிடே (FIDE) மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டு, ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

610
இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் சூதாட்டம்?
Image Credit : ANI

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் சூதாட்டம்?

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ரூ.1.5 லட்சம் கோடி சூதாட்டம் நடந்துள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த போட்டியின் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.1,000 கோடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

710
நிலநடுக்கத்தில் குழந்தைகளைக் காத்த நர்ஸ்கள்!
Image Credit : instagram

நிலநடுக்கத்தில் குழந்தைகளைக் காத்த நர்ஸ்கள்!

அசாம் மாநிலத்தில் நேற்று மாலை 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தின் போது, நாகான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) நடந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

810
அன்புமணி தான் உண்மையான பாமக..!
Image Credit : Asianet News

அன்புமணி தான் உண்மையான பாமக..!

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணியின் அணியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அவர்கள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், ராமதாஸ் ஆதரவாளர்களான ஜிகே மணி, அருள்ன் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

910
தமிழக அரசை வெளுத்தெடுத்த உச்சநீதிமன்றம்
Image Credit : Asianet News

தமிழக அரசை வெளுத்தெடுத்த உச்சநீதிமன்றம்

இலவச திட்டங்களுக்கு வழங்க பணம் இருக்கும் நிலையில் செவிலியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லையா என தமிழக அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.

மேலும் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்ற தமிழக அரசின் வாதத்தை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் மத்திய அரசு, தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

1010
'நானோ பனானா' AI இல் பிரைவசி ஆபத்து!
Image Credit : @ishaangtwt/X

'நானோ பனானா' AI இல் பிரைவசி ஆபத்து!

கடந்த மாதம் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜெமினி நானோ பனானா AI (Gemini Nano Banana AI) செயலி, தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த AI கருவியைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் சாதாரண புகைப்படங்களை கலைநயமிக்க படங்களாக மாற்றிக்கொள்கிறார்கள். இந்த "நானோ பனானா" AI கருவி, ஜெமினி நானோ (Gemini Nano) என்ற கூகுளின் மாதிரியின் மூலம் இயங்குகிறது. ஆனால், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து எச்சரிக்கைகள் எழுந்துள்ளன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
தமிழ்நாடு
உச்ச நீதிமன்றம்
மு. க. ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி
செயற்கை நுண்ணறிவு
டொனால்ட் டிரம்ப்
பீகார்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved