இனி அரசு ஊழியர்கள் ஓடவும் முடியாது ஒளிவும் முடியாது! உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
Government Employees: மேற்கு வங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலையில் சேர்ந்த ஒருவரின் பணி நீக்கத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அரசுப் பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் பின்னணி சரிபார்ப்பு முக்கியம்.
Government Employee
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் அரசு வேலையில் சேருவதற்கு இந்தியராக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். இந்தியர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சரிபார்ப்பதும் காவல்துறையின் வேலையாக உள்ளது. அதேபோல் கல்வி ஆவணங்கள், இதர ஆவணங்கள் பள்ளி கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகள் சரிபார்க்க வேண்டும். இந்த சரிபார்ப்பு முறையாக நடைபெறாததால் பலர் போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலையில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
Government Job
மேற்கு வங்கத்தில் பாசுதேவ் தத்தா என்பவர் கடந்த 1985-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி அரசுப்பணியில் சேர்ந்தார். ஆனால் அவர் கடந்த 2010-ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். என்ன காரணம் என்றால் பாசுதேவ் தத்தா இந்திய குடிமகன் அல்ல என்று அரசால் கண்டுபிடிக்கப்பட்டது. பணிநீக்கத்தை எதிர்த்து மேற்கு வங்கம் நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற ஆகியவற்றில் பாசுதேவ் தத்தா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: நாளை முதல் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியானது சூப்பர் அறிவிப்பு! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
supreme court judgement
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், பாசுதேவ் தத்தாவின் பணிநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
Government Employee News
தீர்ப்பில் நீதிபதிகள் கூறுகையில்: நாட்டில் ஒருவர் அரசுப்பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் அவரது பின்னணியை சரிபார்க்க வேண்டியது ரொம்ப முக்கியம். குறிப்பாக பணியில் சேர்ந்தபோது அவர் தாக்கல் செய்த ஆவணங்களின்படி அவரது குணநலன், பின்னணி, தேசியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: Pongal Gift: பொங்கலுக்கு ரூ.2,000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Police investigation
அனைத்து மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளும் இப்பணியை செய்ய வேண்டும். நன்கு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசுப்பணியில் சேர்ந்த அந்த நபரின் பின்னணியை சரிபார்த்த பிறகுதான் அவரது பணியை வரன்முறை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.