- Home
- இந்தியா
- School Holiday: வாட்டி வதைக்கு வெயில்! ஜூன் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்!
School Holiday: வாட்டி வதைக்கு வெயில்! ஜூன் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்!
Summer Holidays: மே மாதம் முடிந்தும் ஜூன் மாதத்தில் கடுமையான வெயில் நிலவி வருவதால் பள்ளிகள் திறப்பு திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

சுட்டெரிக்கும் வெயில்
டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் வரலாறு காணாத வகையில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே தென்மேற்குப் பருவமழை தென்னிந்தியாவில் பரவத் தொடங்கிவிட்டது. ஆனால், வட மாநிலங்களைச் சென்றடைய இன்னும் சில நாட்கள் ஆகும். ஆகையால் பல்வேறு மாநிலங்களில் வெயில் குறையாமல் சுட்டெரித்து வருகிறது. இதனால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் ஜூன் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.
ஜூன் மாதம் முழுவதும் விடுமுறை
அதேபோல் தலைநகர் புது டெல்லியில் ஜூன் மாதம் முழுவதும் கோடை விடுமுறை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்குள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் ஜூலை 1-ம் தேதி தான் திறக்கப்படும். இதனால் பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர். அதே சமயம், உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதியும், ராஜஸ்தான் மற்றும் பீகாரில் ஜூன் 20-ம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
கோடை விடுமுறை
இதனிடையே தெலங்கானாவிலும் கோடை விடுமுறையை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கிய விடுமுறை, ஜூன் 11-ம் தேதியுடன் முடிவடைந்து ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால், ஜூன் 12ம் தேதி வெள்ளிக்கிழமை அதற்கு மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருகிறது. ஆகையால் வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
தெலங்கானாவில் கோடை விடுமுறை நீட்டிப்பு..
இதனை ஏற்றுக்கொண்ட அரசு பள்ளிகள் திறப்பை ஜூன் 15ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டி இருந்தது. அதன்படி ஜூன் 12 விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை மாதத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலங்கானா மாணவர்களுக்கு 3 நாட்கள் கூடுதல் விடுமுறை கிடைத்துள்ளது.
ஆந்திராவில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுமா..?
தெலங்கானாவைப் போலவே ஆந்திராவிலும் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ.வும், சட்டமன்றக் கட்சித் தலைவருமான விஷ்ணுகுமார் ராஜு, அரசுக்குக் கடிதம் எழுதியிருள்ளார். வெயில் இன்னும் குறையாமல் அதிகமாக இருப்பதால் ஜூன் 12-க்கு பதிலாக ஜூன் 15 அல்லது 17-ம் தேதி பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் திறப்பு பள்ளிபோக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இதனை கல்வித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

