G20 India : ஜி20 ஆலோசனைக் கூட்டம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி!
ஜி-20 நாடுகள் தலைவராக இந்தியா டிசம்பர் 1ம் தேதி முதல் அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் இந்த மாநாட்டை நடத்துவது குறித்து மத்தியஅரசு அனைத்து கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கு முன், பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, பாஜக தலைவர் சீதாராம் யெச்சூரி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவர்களைத் தவிர எடப்பாடி கே. பழனிசாமி, பசுபதிநாத் பராஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் கே.எம்.காதர் மொஹிதீன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம் என்றும், ஜி20 ஆலோசனை தொடர்பான அனைத்துக் கூட்டத்திற்கும் தமிழ்நாடு சார்பில் எல்லா ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்தியாவின் ஜி 20 முன்னுரிமைகள் பற்றிய விரிவான விளக்கக்காட்சியை வழங்கினர்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குழுப்பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். G20 நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் அனைத்து தலைவர்களின் ஒத்துழைப்பையும் கோரினார். பாரம்பரிய நகரங்களுக்கு அப்பால் இந்தியாவின் சில பகுதிகளை காட்சிப்படுத்த G20 பிரசிடென்சி உதவும் என்றும், இதனால் நமது நாட்டின் ஒவ்வொரு பகுதியின் தனித்துவத்தை வெளிக்கொணரும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
G20 கூட்டங்கள் நடைபெறும் இடங்களின் சுற்றுலாவை மேம்படுத்தவும், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தவும் சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
டிசம்பர் 1 அன்று ஜி-20 மநாடுகளின் தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அடுத்த ஜி-20 உச்சி மாநாடு 2023 செப்டம்பர் 9-10 தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறுகிறது.
G-20 என்பது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளைக் கொண்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முறைசாரா குழுவாகும்.
குரூப் ஆஃப் ட்வென்டி (G20 - Group of 20) என்பது உலகின் முக்கிய பொருளாதாரங்களின் ஒரு குழுவாகும். G20 அனைத்து கண்டங்களையும் குறிக்கிறது. இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80%, உலக வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் 60% ஆகியவற்றைக் குறிக்கிறது.
G20 அனைத்து கண்டங்களையும் குறிக்கிறது. இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80%, உலக வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் 60% ஆகியவற்றைக் குறிக்கிறது.
இந்த G-20 நாடுகளில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை அடங்கும்.