- Home
- இந்தியா
- தியோகர் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.. பைத்யநாத் தாமுக்கு நேரடி விமான சேவை..
தியோகர் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.. பைத்யநாத் தாமுக்கு நேரடி விமான சேவை..
பீகாரில் தியோகரில் கட்டப்பட்டு இருக்கும் புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி வரும் ஜூலை 12 ஆம் தேதி நேரில் சென்று திறந்து வைக்கிறார். ரூ. 16,000 கோடிக்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Deoghar Airport
தியோகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இங்கிருந்து பாபா பைத்யநாத் தாமுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படவுள்ளது. தியோகர், எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் ஆபரேஷன் தியேட்டர் சேவைகளை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அதனை தொடர்ந்து பீகார் சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்.
Deoghar Airport
வரும் 12 ஆம் தேதி பாட்னாவிற்கு செல்லும் பிரதமர் மோடி, தியோகரில் ரூ. 16,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் மதியம் 2:40 மணியளவில், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பாபா பைத்யநாத் கோவிலில் தரிசனம் செய்கிறார்.
Deoghar Airport
மாலை 6 மணியளவில், பாட்னாவில் நடைபெறும் பீகார் சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்.நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களின் முக்கிய மத ஸ்தலமான பாபா பைத்யநாத் தாமுக்கு நேரடி இணைப்பை வழங்குவதற்கான முக்கிய நடவடிக்கையாக, தியோகர் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
Deoghar Airport
சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் இந்த விமானநிலையம் கட்டுப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான போக்குவரத்து முனையம் சுமார் ஐந்து லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் கட்டுப்பட்டுள்ளது.தொடர்ந்து தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உட்புற நோயாளிகள் பிரிவு மற்றும் ஆப்ரேஷன் தியேட்டரை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணிக்கிறார்.
Deoghar Airport
இதன்மூலம் அப்பகுதி மக்கள் சிறந்த மருத்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறந்த சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
Baidyanath Dham
புனித தலங்களில் ஒன்றான பைத்யநாத் தாம் கோவிலில் உட்கட்டமைப்பு மேம்படுத்தவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் பிரசாந்த் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டு, “பைத்யநாத் தாம், தியோகர்” எனும் பெயரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
Baidyanath Dham
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய வசதிகள், இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.பின்னர் பீகார் சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
Baidyanath Dham
பீகார் விதான் சபையின் 100 ஆண்டு நினைவாக கட்டப்பட்ட சதாப்தி ஸ்மிருதி ஸ்தம்பத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும் விதானசபா அருங்காட்சியகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்த விழாவில் பிரதமர் விதான் சபா விருந்தினர் மாளிகைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
Baidyanath Dham
.நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களின் முக்கிய மத ஸ்தலமான பாபா பைத்யநாத் தாமுக்கு நேரடி இணைப்பை வழங்குவதற்கான முக்கிய நடவடிக்கையாக, தியோகர் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
Deoghar Airport
பீகாரில் தியோகரில் கட்டப்பட்டு இருக்கும் புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி வரும் ஜூலை 12 ஆம் தேதி நேரில் சென்று திறந்து வைக்கிறார். ரூ. 16,000 கோடிக்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.