MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரூ.2,000க்கு மேல் யு.பி.ஐ-க்கு 0.4% கட்டணத்தை எப்படி நிர்ணயித்தீர்கள்? மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி!

ரூ.2,000க்கு மேல் யு.பி.ஐ-க்கு 0.4% கட்டணத்தை எப்படி நிர்ணயித்தீர்கள்? மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி!

ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு. அக்.15 முதல் புதிய விதிகள் அமல்; எம்.டி.ஆர் கட்டணம் எந்த சட்ட அடிப்படையில் விதிக்கப்படுகிறது, 0.4% எப்படி நிர்ணயிக்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க உத்தரவு.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 28 2026, 06:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு; விளக்கம் அளிக்க உத்தரவு
Image Credit : stockPhoto

தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு; விளக்கம் அளிக்க உத்தரவு

ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அக்.15-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே வேளையில், இக்கட்டணம் எந்த சட்ட அடிப்படையில் விதிக்கப்படுகிறது என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி (RBI), என்.பி.சி.ஐ (NPCI) ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
Image Credit : Asianet News & AI

நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

நாட்டில் பெட்டிக்கடை முதல் பெரிய அளவிலான கொடுக்கல் வாங்கல்கள் வரை யுபிஐ மூலமாகவே பெரும்பான்மையான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குறிப்பிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்கறிஞர் அஞ்சன் தத்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

35
புதிய கட்டண நடைமுறைகள் என்னென்ன?
Image Credit : AI Generated

புதிய கட்டண நடைமுறைகள் என்னென்ன?

அரசு வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி: தனிநபர்களுக்கு இடையே (P2P - Person to Person) பணம் அனுப்ப எந்தவிதக் கட்டணமும் கிடையாது.

வணிக பரிவர்த்தனைகள் (P2M): கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் தொகையில் (Person to Merchant), ரூ.2,000-க்கு மேல் இருக்கும் பட்சத்தில் 0.4% கட்டணம் விதிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் துறைகள்: ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய இடுபொருட்கள் போன்ற துறைகளுக்கு ரூ.2,000-க்கு மேல் செலுத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். மூலதனச் சந்தை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் உண்டு.

விலக்குகள்: ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கும், மாதத்திற்கு யுபிஐ மூலம் ரூ.1 லட்சம் வரை பெறும் சிறு வணிகர்களுக்கும் இந்த கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 96% வணிக யுபிஐ பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
நீதிமன்றத்தில் வாதங்கள்
Image Credit : Gemini AI

நீதிமன்றத்தில் வாதங்கள்

விசாரணையின்போது நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, இந்த எம்.டி.ஆர் (MDR) கட்டணம் என்பது வரியா அல்லது அரசுக் கட்டணமா? இல்லையெனில் இதை வசூலிப்பதற்கான நிர்வாக அதிகாரம் அரசுக்கு எங்கிருந்து வருகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கடராமன் வாதாடுகையில், "இது வரியோ அல்லது அரசுக்கான கட்டணமோ அல்ல; இந்தப் பணம் அரசுக்குச் செல்லாது. யுபிஐ பரிவர்த்தனையை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் வங்கிகள் உள்ளிட்ட கட்டண அமைப்புகளின் (Payment Systems) செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவே இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்தார்.

மனுதாரர் தரப்பில், ரூ.2,000 வரம்பு மற்றும் சிறு வணிகர்களுக்கான ரூ.1 லட்சம் மாதாந்திர வரம்பு எதன் அடிப்படையில் முடிவுசெய்யப்பட்டது என்பதற்கான தெளிவான விளக்கம் இல்ல. வணிகர்கள் மீது சுமத்தப்படும் இந்த கூடுதல் சுமை, மறைமுகமாக வாடிக்கையாளர்கள் மீதே திணிக்கப்படும் அபாயம் உள்ளது என்று வாதிடப்பட்டது.

55
இடைக்காலத் தடை மறுப்பு
Image Credit : X

இடைக்காலத் தடை மறுப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, அக்.15 முதல் அமலுக்கு வரும் இக்கட்டண முறைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேநேரத்தில், 0.4% கட்டணம் எவ்வாறு கணக்கிடப்பட்டது மற்றும் இந்தக் கட்டண விதிப்புக்கான சட்டரீதியான பின்னணி என்ன என்பது குறித்து பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்.பி.சி.ஐ ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உச்ச நீதிமன்றம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Strike: வங்கி வேலைநிறுத்தம் திடீர் ஒத்திவைப்பு..! 5 நாள் வேலை வாரம் குறித்து முக்கிய முடிவு..!
Recommended image2
Farmer Subsidy: ரூ.58,000 மானியம் + அதிக வருமானம்.! விவசாயிகள் பெறுவது எப்படி ? யார் யாருக்கு கிடைக்கும்?
Recommended image3
Super El Nino: 15800 இந்தியர்களை காவு வாங்கப்போகும் வெப்பம்..! வெளியான பகீர் ரிபோர்ட்..
Related Stories
Recommended image1
Bank Strike: வங்கி வேலைநிறுத்தம் திடீர் ஒத்திவைப்பு..! 5 நாள் வேலை வாரம் குறித்து முக்கிய முடிவு..!
Recommended image2
Farmer Subsidy: ரூ.58,000 மானியம் + அதிக வருமானம்.! விவசாயிகள் பெறுவது எப்படி ? யார் யாருக்கு கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved