MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பிரேசில் பயணம் சக்சஸ்! அடுத்து கயானா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரேசில் பயணம் சக்சஸ்! அடுத்து கயானா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Modi in Guyana: பிரேசிலில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, கயானாவுக்குச் சென்றுள்ளார். முன்னதாக, ஜி20 உச்சிமாநாட்டின் போது, ​​அவர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்பட உலகளாவிய தலைவர்களைச் சந்தித்தார்.

2 Min read
Author : SG Balan
| Updated : Nov 20 2024, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Brasil G20 Summit 2024

Brasil G20 Summit 2024

பிரேசிலில் மோடிக்கு இந்திய சமூகத்தினர் சமஸ்கிருத கீர்த்தனைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜி20 உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் மோடி உரையாடினார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு அவர்களின் முதல் சந்திப்பு இது.

உச்சிமாநாட்டின் ஒரு அமர்வின்போது, ​​மோடி இந்தியாவில் சென்ற ஆண்டு நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் கருப்பொருளான "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்பதை வலியுறுத்தினார். உணவு, எரிபொருள் மற்றும் உரம் ஆகியவற்றில் உலகளாவிய மோதல்களின் தாக்கத்தை மோடி எடுத்துரைத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Modi in Brazil

Modi in Brazil

செவ்வாயன்று, பிரேசில், இத்தாலி, இந்தோனேசியா, போர்ச்சுகல், நார்வே, சிலி, அர்ஜென்டினா, எகிப்து, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டார். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன், மோடி இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை செய்தார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்த மோடி, விண்வெளி ஆய்வு, ஆற்றல் திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்க சந்தித்தார். 

35
G20 Summit 2024

G20 Summit 2024

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் உடனான பேச்சுவார்த்தையில், தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி, பாதுகாப்பு போன்ற துறைகளில் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு மோடி விருப்பம் தெரிவித்தார். வரும் ஆண்டில் இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் திட்டத்தை ஸ்டார்மர் அறிவித்தார்.

மோடிக்கும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கும் இடையே நடந்த விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இந்தியாவும் இத்தாலியும் 2025-29க்கான மூலோபாய செயல் திட்டத்தை வெளியிட்டன. இந்த திட்டம் பாதுகாப்பு, வர்த்தகம், சுத்தமான எரிசக்தி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

45
Modi in Guyana

Modi in Guyana

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் கூட்டாக செயல்படவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. ஆஸி., பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி20 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலியின் அழைப்பின் பேரில் நரேந்திர மோடியின் கயானா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் நவம்பர் 21 வரை தொடரும்.

55
Guyana

Guyana

56 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஒரு இந்தியப் பிரதமர் கயானா பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. கயானா வந்தடைந்த மோடியை, கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலி, பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி, கிரெனடா பிரதமர் டிக்கன் மிட்செல் ஆகியோர் வரவேற்றார். கயானாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களும் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். இந்தியா-கயானா இடையேயான நெருங்கிய நட்புறவுக்குச் சான்றாக, ஜார்ஜ்டவுன் மேயர், ஜார்ஜ்டவுன் நகரின் திறவுகோலை பிரதமரிடம் வழங்கினார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
நரேந்திர மோடி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Cylinder : கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை என்ன? முழு விவரம்!
Recommended image2
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved