MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Delhi Fire Accident : டெல்லி உணவகத்தில் பயங்கர தீ விபத்து: 18 பேர் உடல் கருகி பரிதாப பலி!

Delhi Fire Accident : டெல்லி உணவகத்தில் பயங்கர தீ விபத்து: 18 பேர் உடல் கருகி பரிதாப பலி!

Delhi Fire Accident : தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இன்று (03-06-2026) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 03 2026, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
நடந்தது என்ன?
Image Credit : GEMINI AI

நடந்தது என்ன?

மாளவியா நகர் பகுதியில் உள்ள ‘லெமன் கிரீன்’ என்ற உணவகத்தில் இன்று காலை வழக்கம் போல் பணிகள் நடந்துகொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் உணவக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் உள்ளே இருந்தனர்.

தீ மிக வேகமாக பரவியதால், கட்டிடத்திற்குள் இருந்தவர்களால் வெளியேற முடியாமல் புகை மூட்டத்திற்குள் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக உணவகத்தின் அடித்தளத்தில் இருந்த பலரால் தப்பிக்க முடியாமல் போனது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
விரைந்த மீட்புக்குழுவினர்
Image Credit : ANI

விரைந்த மீட்புக்குழுவினர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து உணவகத்தின் அடித்தளத்திற்குள் புகுந்து சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர். முதற்கட்டமாக 11 பேர் மீட்கப்பட்டு, CATS ஆம்புலன்ஸ்கள் மூலம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், கடுமையான தீக்காயங்கள் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related Articles

Related image1
Now Playing
Delhi CM Rekha Gupta | டெல்லி முதல்வர் ரேகா குப்தா சொத்து மதிப்பு? வெளியான புதிய தகவல்கள்!
Related image2
EV Car Fire Accident: சார்ஜ் போட்ட எலக்ட்ரிக் கார்.. பற்றி எரிந்த வீடு.. 7 பேர் உடல் கருகி பலி..!
33
முதலமைச்சர் இரங்கல்
Image Credit : GEMINI AI

முதலமைச்சர் இரங்கல்

இந்த கொடூர விபத்து குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டதாவது:

"மாளவியா நகர் உணவக தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை, பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) மற்றும் CATS ஆம்புலன்ஸ் சேவைகள் உடனடியாக விரைந்து செயல்பட்டு பலரை மீட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் டெல்லி அரசு முன்னின்று வழங்கி வருகிறது. இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டெல்லி அரசு உறுதுணையாக இருக்கும்."

விசாரணை தீவிரம்

தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்து குறித்து டெல்லி காவல்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளன.

உணவகத்தில் போதிய தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள் (Fire Safety Norms) கடைப்பிடிக்கப்பட்டதா, ஏதேனும் விதிமீறல்கள் அல்லது அலட்சியம் காரணமாக இந்த விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

AM
Arun Mozhi Varman
தில்லி
தீ விபத்து
இந்தியா
Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Kisan: இந்த 4 தப்ப செஞ்சா உங்களுக்கு ₹2,000 வராது! உடனே சரிபாருங்க
Recommended image2
56 லட்சம் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..! ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் முழுவதும் ரத்து..
Recommended image3
ரூ.15 ஆயிரத்தில் ஆன்மிக டூர்.. நேபாளம் முதல் ராமேஸ்வரம் வரை ஐஆர்சிடிசி சூப்பர் ஆஃபர்!
Related Stories
Recommended image1
Now Playing
Delhi CM Rekha Gupta | டெல்லி முதல்வர் ரேகா குப்தா சொத்து மதிப்பு? வெளியான புதிய தகவல்கள்!
Recommended image2
EV Car Fire Accident: சார்ஜ் போட்ட எலக்ட்ரிக் கார்.. பற்றி எரிந்த வீடு.. 7 பேர் உடல் கருகி பலி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved