அடுத்த துணை ஜனாதிபதி இவரா? ஹரிவன்ஸ் எம்பி-க்கு லக் அடிக்குமா?
ஜக்தீப் தன்கர் ராஜினாமாவால் துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாகியுள்ளது. ஹரிவன்ஷ் சிங் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி அடுத்த நடைமுறை என்ன?

அடுத்த துணை குடியரசுத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை, துணை குடியரசுத் தலைவரும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது இந்த நடவடிக்கை, அடுத்த துணை துணை குடியரசுத் தலைவரைத் தேடும் பணியைத் தூண்டியுள்ளது.
ராஜ்யசபா துணைத் தலைவரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.யுமான ஹரிவன்ஷ் சிங், இந்தப் போட்டியில் முன்னணியில் உள்ளார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற விவகாரங்களில் அவருக்குள்ள அனுபவமும், தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது வாய்ப்புகளை அதிகமாக்குகின்றன. ஆனார், பீகார் முதல்வராக உள்ள நிதிஷ்குமாரை துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாகும் அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். இருப்பினும், தன்கருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்பது குறித்து அரசு இன்னும் மௌனம் காக்கிறது.
அரசியலமைப்பு கூறுவது என்ன?
அரசியலமைப்பின் 68வது பிரிவின் 2வது பிரிவின்படி, துணை குடியரசுத் தலைவர் பதவி மரணம், ராஜினாமா அல்லது நீக்கம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் காலியாகும்போது, அந்தப் பதவிக்கு இன்னொருவரைத் தேர்வு செய்யலாம். அப்போது தேர்ந்தெடுக்கப்படுபவர் பதவியேற்ற நாளிலிருந்து முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.
துணை குடியரசுத் தலைவர் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன் இறப்பு அல்லது ராஜினாமா செய்தால், அல்லது துணை குடியரசுத் தலைவரே இந்திய குடியரசுத் தலைவராக செயல்படும்போது, துணை குடியரசுத் தலைவரின் கடமைகளை யார் செய்வார் என்பது குறித்து அரசியலமைப்பில் கூறப்பட்டவில்லை.
ஐந்தாண்டு காலம் பதவி
துணை குடியரசுத் தலைவர் நாட்டின் இரண்டாவது உயர்ந்த அரசியலமைப்பு பதவியாகும். அவர் ஐந்தாண்டு காலம் பணியாற்றுவார். ஆனால் பதவிக்காலம் முடிந்த பிறகும், அடுத்தவர் பதவியேற்கும் வரை தொடர்ந்து பதவியில் இருக்க முடியும்.
துணை குடியரசுத் தலைவர் ராஜ்யசபாவின் தலைவராகவும் இருப்பதால், துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாகும்போது, அவையின் துணைத் தலைவர் அல்லது இந்திய குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட ராஜ்யசபாவின் வேறு உறுப்பினர் அவைச் செயல்பாடுகளை வழிநடத்தலாம்.
ராஜ்யசபா தலைவர்
துணை குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பதன் மூலம் தனது பதவியை ராஜினாமா செய்யலாம். ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து அது நடைமுறைக்கு வரும்.
துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தப் பதவியின் மூலம் மாநிலங்களவைக்கும் தலைவராகிறார். இதனால், அவர் வேறு எந்த லாபகரமான பதவியையும் வகிக்கமாட்டார்.