MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரயில்வே தட்கல் டிக்கெட் மோசடி: புரோக்கர்களின் கைவரிசை இப்படித்தான் நடக்குது!

ரயில்வே தட்கல் டிக்கெட் மோசடி: புரோக்கர்களின் கைவரிசை இப்படித்தான் நடக்குது!

உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு டெலிவரி செய்யும் புரோக்கர்களின் நெட்வொர்க் நாடு முழுவதும் பரவியுள்ளது. ​​தரகர்கள் ஏர் கார்கோ (கூரியர்) மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

2 Min read
Author : SG Balan
Published : Nov 13 2024, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Tatkal Fraud

Tatkal Fraud

உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு டெலிவரி செய்யும் புரோக்கர்களின் நெட்வொர்க் நாடு முழுவதும் பரவியுள்ளது. ​​தரகர்கள் ஏர் கார்கோ (கூரியர்) மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சண்டிகர் தரகர்களின் நெட்வொர்க் மும்பையின் குப்வாரா, புல்வாமா, ஸ்ரீநகர் மற்றும் உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் பரவியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Brokers

Brokers

இந்த மோசடி பெரும்பாலும் தட்கல் டிக்கெட்டுகளில் மட்டுமே நடக்கிறது. வடக்கு ரயில்வேயின் விஜிலென்ஸ் விசாரணையில் ஸ்ரீநகரில் இருந்து உத்தரபிரதேசம் வரை, புரோக்கர்களின் நெட்வொர்க் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள குப்வாரா மற்றும் புல்வாமாவில் இருந்து தட்கல் டிக்கெட்டுகள் உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் லக்னோவிற்கு அனுப்பப்படுகின்றன.

37
Copy of tickets

Copy of tickets

இந்த இரண்டு நிலையங்களிலும் டிக்கெட்டுகள் அச்சிடப்படுகின்றன. பயணிகள் லக்னோ மற்றும் கோரக்பூரிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், டிக்கெட்டின் புகைப்படம் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகிறது. இரண்டு நகரங்களிலும் டிக்கெட்டின் நகல் எடுக்கப்படுகிறது.

47
Vigilance Investigation

Vigilance Investigation

இந்த வகையான மோசடி பல ரயில் நிலையங்களில் இயங்குகிறது. ரயில்வே விஜிலென்ஸ் விசாரணையின்போது அசல் மற்றும் நகல் டிக்கெட்டுகள் இரண்டையும் பார்த்துள்ளனர். இரண்டும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கின்றன. டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்கள் இந்த டிக்கெட்டுகளை முதல் பார்வையில் எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

57
Tatkal - Railway

Tatkal - Railway

தரகர்கள் கூட்டாகச் சேர்ந்து தட்கல் டிக்கெட்டுகளை தங்கள் நெட்வொர்க் மூலம் விளம்பரப்படுத்துகிறார்கள். இந்த மோசடி நாட்டின் பல மாநிலங்களில் தினமும் நடக்கிறது. இதைத் தடுக்க ரயில்வேயின் அனைத்து ஏஜென்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.

67
VIP quota

VIP quota

தரகர்களின் டிக்கெட்டுகள் விஐபி கோட்டா மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன. எனவே, விஐபி கோட்டா மூலம் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை சரிபார்க்குமாறு டிக்கெட் சோதனை ஊழியர்களுக்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக, ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்பில் விஐபி கோட்டா மூலம் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான இருக்கை எண்கள் முன்கூட்டியே வழங்கப்படும்.

77
Indian Railways

Indian Railways

விஐபி கோட்டாவில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெற்ற பயணிகள் மட்டுமே இந்த இருக்கைகளில் பயணம் செய்கிறார்கள் என்பது டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களுக்குத் தெரியும். சண்டிகரில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் டிக்கெட் அனுப்பும் வகையில் புரோக்கர்களின் நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. சில ரயில் டிக்கெட்டுகள் சண்டிகரில் இருந்து கப்பல் மூலம் அனுப்பப்படுகின்றன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329 & 387
AUSAUS
(55.0 ov) 429 & 107/8
Day 5 - Session 2
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IndiGo: ஒரு பயணிக்கு ரூ.590 கூடுதல் வருமானம்! இத்தனை நாள் இதுதெரியாம போச்சே
Recommended image2
நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.! ஜிஎஸ்டி முதல் மொபைல் அழைப்புகள் வரை 5 புதிய விதிகள் – முழு விவரம்!
Recommended image3
இனி GPS தேவையில்லை? ISROவின் புதிய சாதனை.. செல்போன் முதல் ராணுவம் வரை கிடைக்கப்போகும் அதிரடி பலன்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved