ரயில் டிக்கெட் முன்பதிவில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுவது எப்படி?
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது எப்படி இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது என்ற கேள்வியும் பலரின் மனதில் இருக்கும். இருக்கை ஒதுக்கீட்டுக்காக ரயில்வே பின்பற்றும் விதிகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
Indian Railways
இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில் அமைப்பாகும். இந்தியாவில் தினமும் 2.5 கோடிக்கும் அதிகமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆஸ்திரேலியா போன்ற பெரிய நாட்டின் மக்கள்தொகைக்கு கிட்டத்தட்ட சமம்.
Trains
ரயில் பயணம் மிகவும் வசதியானது. அதனால்தான் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். ரயிலில் பயணிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் பயணம் செய்யலாம். அல்லது முன்பதிவு அல்லாத பொதுப் பெட்டிகளில் பயணிக்கலாம்.
Train ticket Reservation
ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஜெனரல் கோச் என்று அழைக்கப்படுகிறது. இதில் எந்த பயணியும் பொதுவான டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். இதில் பயணிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுவது இல்லை. எத்தனை பயணிகள் வேண்டுமானாலும் பயணிக்கலாம். ஆனால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இது நடக்காது.
Railway Reservation Rules
ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட கோச்சில் யாராவது டிக்கெட் முன்பதிவு செய்தால், அவருக்கு இருக்கை எண் ஒதுக்கப்படுகிறது. அந்தப் பயணி அதே இருக்கை எண்ணில் பயணிக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எப்படி இருக்கைகளை ஒதுக்குகிறது என்ற கேள்வி எழுகிறது.
Railway Seat Allotment
ரயில்களில் இருக்கை ஒதுக்கீடு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நடைபெறுகிறது. இதனால், பயண தேதிக்கு எவ்வளவு முந்தி முன்பதிவு செய்கிறோமோ அந்த அளவு இருக்கையைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
Berth allotment rules
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, கீழ் பெர்த், அப்பர் பெர்த், மிடில் பெர்த், சைட் லோயர் அல்லது சைட் அப்பர் ஆகியவற்றைத் தேர்வுசெய்யலாம். இதில் இந்த இருக்கை கிடைக்கும் என்பது உறுதியாகக் கூறமுடியாது. தேர்ந்தெடுத்த இருக்கை கிடைக்கவில்லை என்றால், வேறு இருக்கை வழங்கப்படும்.
Train ticket allotment
அதேசமயம் ரயிலின் எடையை சமநிலைப்படுத்த, ரயில்வே முன்பதிவின்போது நடு இருக்கையை முதலில் ஒதுக்குகிறது. இதற்குப் பிறகு, முன்னும் பின்னுமாக சம எண்ணிக்கையிலான இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் ரயிலின் எடை சமநிலையுடன் இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.