Indian Railway: ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இத்தனை வசதிகள் இலவசம்!
ரயில் தாமதமாக வருவதால் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். சென்றடையும் நேரம், உணவு உண்ணும் நேரம், எல்லாமே குழப்பமாகிவிடும். இந்த இடையூறு காரணமாக ரயில் தாமதமாக வரும்போது பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. அதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ரயில் தாமதமானால்
தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள், ஆனால் பல நேரங்களில் ரயில் தாமதமாக வருகிறது. அப்போதுதான் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சாப்பிடும் நேரம், அடையும் நேரம் எல்லாம் மாறுகிறது.
ரயில்வே ஏற்பாடு
பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக இந்திய ரயில்வே அவ்வப்போது விதிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது. ரயில் தாமதமானால், அதனால் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்கு இந்திய ரயில்வே சில சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்கிறது.
இலவச உணவு
ரயில் இரண்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக இயக்கப்பட்டால், பயணிகள் இலவச உணவைப் பெறலாம். சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ போன்ற ரயில்களில் இந்த வசதி உள்ளது. பயணிகளுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும். மேலும் நேரத்தைப் பொறுத்து, இரண்டு பிஸ்கட்களுடன் டீ அல்லது காபியும் வழங்கப்படும்.
வசதியான தங்குமிடம்
ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு இலவச தங்கும் வசதிகளும் கிடைக்கும். காத்திருப்பு அறை வசதியைப் பெறும் அனைத்து பயணிகளும் தங்கள் முன்பதிவு டிக்கெட்டுகளைக் காட்ட வேண்டும். வெவ்வேறு பிரிவுகளுக்கு தனித்தனி காத்திருப்பு அறைகள் உள்ளன.
பணம் திரும்பக் கிடைக்கும்
பனிமூட்டம் காரணமாக ரயில் 3 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக இயக்கப்பட்டால், பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்து முழுப் பணத்தையும் திரும்பப் பெறுலாம். ரயில்வே கவுன்டரில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் இந்த வசதி இருந்த நிலையில், இப்போது ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய பயணிகளுக்கும் இந்த வசதி உள்ளது.
ஒரு மணி நேரத்தில்
பனிமூட்டம் மட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் ரயிலைத் தவறவிட்டாலும், பயணிகள் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். இதற்கு, ரயில் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் டிடிஆர் படிவத்தை (TDR Form) நிரப்ப வேண்டும். இந்த வசதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.