முழு அமைதி திரும்புமா? இந்தியா-பாகிஸ்தான் ராணுவ இயக்குநர்கள் இன்று பேச்சுவார்த்தை!
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ இயக்குநர்கள் பேச்சுவார்த்தை இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் முழுமையான அமைதி திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

India-Pakistan DGMOs Talks
பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் அப்பாவி மக்களை குறி வைத்தது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் என மாநிலங்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இந்திய ராணுவம் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம்
இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் அழுத்தத்தின் பேரில் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்தியாவும் இதற்கு சம்மதம் தெரிவித்ததால் மோதல் முடிவுக்கு வந்தது. ஆனாலும் ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று விமானப்படை நேற்று தெரிவித்தது. மேலும் நேற்று செய்தியாளர்களுக்கு பேசிய முப்படை அதிகாரிகள், ''இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு இந்தியா தக்க பாடம் புகட்டியுள்ளது'' என்று தெரிவித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (டிஜிஎம்ஓக்கள்) இன்று முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ள டிஜிஎம்ஓ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளும் போர் நிறுத்த விதிமுறைகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தி வைத்துள்ளது. மிக முக்கிய சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கான விசாவை முழுமையாக நிறுத்தியுள்ளது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என இந்தியா உறுதி
அட்டாரி வாகா எல்லை
ஆகையால் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் பேச்சுவார்த்தையின்போது இது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இரு நாடுகளின் எல்லைப்பகுதிகளில் ராணுவ வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும். மேலும் அட்டாரி வாகா எல்லை திறப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.