MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • 2025இல் மழைப்பொழிவு இயல்பைவிட அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

2025இல் மழைப்பொழிவு இயல்பைவிட அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 2025ஆம் ஆண்டில் இயல்பை விட அதிகமான பருவமழை பெய்யும் என்று கணித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பை விட அதிகமான பருவமழை பெய்யும் என்றும், வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : SG Balan
| Updated : Apr 16 2025, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Weather Forecast for Monsoon 2025

Weather Forecast for Monsoon 2025

இயல்பை விட அதிகமான பருவமழை

இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) 2025ஆம் ஆண்டில் இயல்பை விட அதிகமான பருவமழை பெய்யும் என்று கணித்துள்ளது. நீண்ட கால சராசரி (LPA) 105% ஆக இருக்கும் என்றும் கணிப்பில் 5% வரை வித்தியாசம் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

லடாக், வடகிழக்கு மற்றும் தமிழ்நாடு தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பை விட அதிகமான பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Monsoon forecast

Monsoon forecast

நான்கு மாதங்களில் அதிக மழை

"ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாத பருவமழைக் காலத்தில் இந்தியாவில் இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று ஐஎம்டி தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் இயல்பை விட அதிகமான மழை பெய்ய 59% வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சாதாரண பருவமழை அளவீடு 96% முதல் 104% வரை இருக்கும்.

35
Monsoon report

Monsoon report

எல் நினோ

எல் நினோ நிலை நடுநிலையாக இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. எல் நினோ என்பது மத்திய பசிபிக் பகுதியில் 0.5 முதல் 1 டிகிரி வரை வெப்பநிலை உயர்வைக் குறிக்கிறது. "நடுநிலை" என்பது எல் நினோ வெப்பநிலையில் உயர்வு இல்லை என்பதைக் குறிக்கிறது.

இருப்பினும், நாட்டின் சில பகுதிகள் ஏற்கனவே கடுமையான வெப்பத்தை எதிர்த்துப் போராடி வருகின்றன. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

45
Monsoon predictions

Monsoon predictions

சராசரி மழைப்பொழிவு

"இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் சராசரி மழைப்பொழிவு இயல்பை விட சுமார் 105% ஆக இருக்கும். சராசரியாக 91 செ.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், சில பகுதிகளில் சராசரியை விட குறைவாகவும், சில பகுதிகளில் அதிகப்படியான மழைப்பொழிவும் இருக்கும். கடந்த ஆண்டை விட வெப்ப அலை அதிகமாக இருக்கும், குறிப்பாக வட இந்தியாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்ப அலை பாதிப்பு கூடுதலாக இருக்கும்" என்று புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில், மத்திய மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் இதற்கான காரணங்களில் ஒன்று என்றும் ஐஎம்டி தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறினார்.

55
India Meteorological Department

India Meteorological Department

ஸ்கைமெட் கணிப்பு

எல் நினோ ஆண்டாக இருந்த 2023ஆம் ஆண்டில், பருவமழை 6% குறைவாகப் பெய்தது. 2024ஆம் ஆண்டில் எல் நினோ நடுநிலையாக இருந்ததால் 8% அதிக மழைப்பொழிவு கிடைத்தது என்றும் வானியை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏப்ரல் 8 ஆம் தேதி, தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் (Skymet), இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்று கூறியிருந்தது

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வானிலை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
மழை செய்திகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jantar Mantar Protest: 'ஹிட்' அடிச்சாலும் சாகாத கரப்பான் பூச்சிகள் நாங்கள்! - தலை நகரில் போராட்டம்
Recommended image2
Train Tickets: ரயில் டிக்கெட் புக்கிங் பண்ணுறீங்களா? 5 ட்ரிக்ஸ் தெரிந்தா ஆயிர கணக்குல மிச்சப்படுத்தலாம்
Recommended image3
PUCC இல்லையா? 1ம் தேதி முதல் பெட்ரோல், டீசலுக்கு ‘நோ’! புதிய அதிரடி உத்தரவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved