இந்தியாவின் முதல் ஹைப்பர் லூப் ரயில்! 410 கி.மீ. பயணம் வெறும் 25 நிமிடத்தில்!
Mumbai - Pune Hyperloop Train: 410 கிமீ நீளமுள்ள இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் பாதை சோதனை ஓட்டத்திற்கு இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் பாதையின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த பாதை சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது என்றும் அவர் அறிவித்தார்.
Mumbai - Pune Hyperloop Train Distance
விமானத்தைவிட வேகமான பயணம்: விமானத்தில் செல்வதைவிட வேகமாக ரயிலில் செல்ல முடியுமா? அதைச் சாத்தியமாக்குவது தான் ஹைப்பர் லூப் ரயில் திட்டம். இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் பாதை 410 கிமீ நீளமுள்ளது. இதில் இயக்கப்படும் ஹைப்பர்லூப் ரயிலின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
What is a Hyperloop Train?
ஹைப்பர் லூப் ரயில் என்றால் என்ன?: ஹைப்பர் லூப் ரயில் என்பது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான அதிவேக போக்குவரத்து அமைப்பாகும். ஒரு ஹைப்பர் லூப் ரயில் காந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழாய் வழியில் இயங்குகிறது. அதன் உள்ளே ரயில் மிக அதிக வேகத்தில் இயங்க முடியும். இந்திய ரயில்வேயின் ஹைப்பர்லூப் அமைப்பின் அதிகபட்ச வேகம் மணிக்கு 600 கிமீ. ஹைப்பர் லூப் குழாய் உராய்வு இல்லாமல் இயங்கும்போது மணிக்கு 1200 கிமீ வேகத்தை அடைய முடியும்.
Mumbai to Pune in 25 mins in Hyperloop Train
மும்பை - புனே 25 நிமிடங்களில்...: ஹைப்பர் லூப்பின் ரயிலின் வேகம் பயண நேரத்தை நம்பமுடியாத அளவுக்குக் குறைக்கும். ஹைப்பர்லூப் புல்லட் ரயில்களை விட வேகமானதாக இருக்கும். இந்த ரயில் மகாராஷ்டிராவின் புனே மற்றும் மும்பைக்கு இடையிலான தூரத்தை வெறும் 25 நிமிடங்களில் கடக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
First Hyperloop Train in India
முதல் ஹைப்பர் லூப் ரயில்: முதல் ஹைப்பர்லூப் ரயில் மும்பை மற்றும் புனே இடையே இயக்கப்படும். ஆரம்பத்தில் மணிக்கு 360 கிமீ வேகத்தில் இயக்கப்படும். வழக்கமான ரயில்கள் சுமார் 3-4 மணிநேரத்தில் பயணிக்கும் தூரத்தை ஹைப்பர்லூப் ரயில் வெறும் 25 நிமிடங்களில் கடக்கும். இது விமானப் பயணத்தை விட மிக வேகமானதாக இருக்கும்.
Mumbai Pune Hyperloop Train Ticket
ஹைப்பர் லூப் ரயில் டிக்கெட் எவ்வளவு?:
எதிர்காலத்தில் ஹைப்பர் லூப் ரயில்கள் விமானப் பயணத்தை விட வேகமானதாக இருக்கும் என்றாலும், அவற்றின் டிக்கெட்டுகள் விமானக் கட்டணத்தைவிட அதிகமாக இருக்காது. ஆனால், கிட்டத்தட்ட விமான டிக்கெட்டுக்குச் சமமான விலையில் இருக்கும் என ஊகிக்கப்படுகிறது.
Hyperloop Train Specialty
ஹைப்பர் லூப் ரயிலின் சிறப்புகள்:
ஹைப்பர் லூப் ரயில் பாதையின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? ஹைப்பர் லூப் டிராக் இடைவிடாத பயண அனுபவத்தை வழங்குவதால், விமானப் பயணத்தை விட இந்த அனுபவம் பலரைக் கவரக்கூடும். ஹைப்பர்லூப் ரயிலில் இடையில் நிறுத்தங்கள் இருக்காது என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம்.
Elon Musk on Hyperloop Train
ஹைப்பர் லூப் பற்றி எலான் மஸ்க் சொன்னது என்ன?
ஹைப்பர் லூப் கான்செப்ட் முதன்முதலில் 2013ஆம் ஆண்டில் அமெரிக்கத் தொழிலதிபரான எலோன் மஸ்க்கால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு அதிவேக நேரத்தில் பயணிக்கும் ஹைப்பர் லூப் அமைப்பு உருவாக்குவது பற்றி அப்போதே பேசியிருக்கிறார்.