Bengaluru Student: பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி ரூ.2.5 கோடி மோசடி! நடந்தது என்ன?
பெங்களூருவில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவியை நாடக காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டு, மிரட்டி ரூ.2.5 கோடி பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Love
தற்போதைய காலக்கட்டத்தில் உண்மையான காதலை விட நாடக காதலே அதிகம். நாடக காதல் என்றால் ஒரு ஆணை ஒரு பெண்ணோ ஒரு பெண்ணை ஒரு ஆணோ பணத்துக்காகவோ சொத்துக்காகவோ மற்றும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அவர்களது வீட்டாருக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிப்பதையே நாடக காதல் என்பார்கள். இதுபோன்ற சம்பவம் ஒன்று பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.
Bengaluru High School Student Fraud
பெங்களூருவில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவியை நாடக காதல் வலையில் வீழ்த்தியது மட்டுமல்லாமல் அப்பெண்ணை பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார். பின்னர், அவரது வீட்டாருக்கு மகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டி ரூ.2.5 கோடி பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
love trap blackmail
இந்த சம்பவம் பெங்களூரு புறநகர் பகுதியில் நடந்துள்ளது. தனியார் பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தியது மட்டுமல்லாமல் பணம் பறித்து மிரட்டல் விடுத்த மோகன் குமார் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவரும் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2017-2022 வரை படித்துள்ளார். அப்போது பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த இளைஞர் அந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி நடித்துள்ளார்.
private photo video
பள்ளியில் படிக்கும்போதே ரிசார்ட், பப், பார்ட்டி, சினிமா, பூங்கா என அழைத்துச் சென்றுள்ளார். அந்த பெண்ணின் வீட்டார் கோடீஸ்வரர்கள் என்பதை அறிந்த கொண்ட அவர், அப்பெண்ணிடமிருந்தே பணத்தை தண்ணீயாக செலவழித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பலமுறை பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
Bengaluru Crime News
பள்ளி படிப்பை முடித்ததும் அந்த பெண்ணை கோவா, ரிசார்ட், பார்ட்டி என பல நாட்கள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு தெரியாமலே அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துள்ளார். பின்னர், எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று இளைஞர் கேட்ட போது அப்பெண் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நீ பணம் கொடுக்கவில்லை என்றால், உன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
Police Arrest
இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனாலும் அப்பெண் பணம் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனையடுத்து நேரடியாக அவரது வீட்டாருக்கு அப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டியுள்ளார்.அப்போது அப்பெண்ணின் வீட்டாரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ,2.5 கோடி பணம் பறித்துள்ளார். மேலும், தனக்காக பைக், நகைகள், ரொக்கப் பணம், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றவற்றை பரிசாகப் பெற்றுள்ளார். இதன் பின்னரும் அப்பெண்ணின் காதலை மறுத்து மோசடி செய்து, மீண்டும் பணம் கேட்டுள்ளார். இவரது தொல்லையைத் தாங்க முடியாமல், அப்பெண் பெங்களூரு சிசிபி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.