திருமணத்திற்கு சென்ற பேருந்து தலைப்புற கவிழ்ந்து விபத்து! 7 பேர் துடிதுடித்து பலி! 30 பயணிகள் படுகாயம்..!
ஆந்திராவில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள உறவினர்கள் அரசு சொகுசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காக்கி நாடா அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் முயன்றார்.
அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 அடி ஆழம் கொண்ட கல்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும் மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.