செம கிராண்டா நடந்த வரலக்ஷ்மி விரதம் - அப்பா அம்மா நண்பிகளோடு கொண்டாடிய அனிதா விஜயகுமார்!
Anitha Vijayakumar : பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா விஜயகுமார் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வரலக்ஷ்மி விரதம் கொண்டாடியுள்ளார்.
Anitha
தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகர்களில் ஒருவர் தான் விஜயகுமார். இவருடைய இரண்டாவது மனைவி மற்றும் இவருடைய ஐந்து குழந்தைகள் என்று அனைவருமே நடிப்புத் துறையில் பெரிய அளவிலான சாதனைகளை படைத்தவர்கள் தான்.
Anitha Vijayakumar Varalakshmi Viratham
நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்து கண்ணுவிற்கு பிறந்த மூன்று குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார் மற்றும் நடிகர் அருண் விஜய். இதில் மூத்த மகள் அனிதா விஜயகுமார் மட்டும் தான் திரைத்துறையில் பங்கேற்காமல் இருப்பவர்.
Doctor Anitha Vijayakumar
பல ஆண்டுகளுக்கு முன்பே அனிதா விஜயகுமார் தனது கணவரோடு வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அவர் ஒரு மருத்துவராக தற்பொழுது சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை அவர் கட்டி முடித்ததும் அனைவரும் அறிந்ததே.
Vijayakumar Family
இந்நிலையில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் தனது மகன், தாய் மற்றும் தந்தையோடு இணைந்து வரலட்சுமி விரதத்தை விமர்சையாக கொண்டாடியுள்ளார் Anitha Vijayakumar. இந்த நிகழ்ச்சியில் அவருடைய நண்பிகள் பலரும் பங்கேற்றனர்.
Anitha Vijayakumar Friends
அனிதா விஜயகுமார் அண்மையில் தான் தனது மகள் தியாவிற்கு ஊரே மெச்சும் அளவிற்கு வெகு விமர்சையாக திருமணத்தை நடத்தி முடித்தார். சென்னையில் தமிழ் முறைப்படியும், வெளிநாட்டில் ஆங்கில முறைப்படியும் தியாவின் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Anitha Vijayakumar son
என்னதான் டாக்டர் அனிதா விஜயகுமார் வெளிநாட்டில் வசித்து வந்தாலும், தனது இல்ல விசேஷங்கள் மற்றும் பண்டிகைகள் அனைத்திற்கும் தவறாமல் சென்னைக்கு தனது குடும்பத்தோடு கொண்டாட மறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸில் டம்மி பீஸ் ஆகிப்போன கீர்த்தி சுரேஷின் "ரகு தாத்தா" - முதல் நாள் வசூல் நிலவரம் இதோ!