- Home
- Gallery
- இயக்குனர் ஹரி காதலுக்கு தூது போன வனிதா விஜயகுமார்.. ஹரி- நடிகை ப்ரீத்தா விஜயகுமார் லவ் ஸ்டோரி!
இயக்குனர் ஹரி காதலுக்கு தூது போன வனிதா விஜயகுமார்.. ஹரி- நடிகை ப்ரீத்தா விஜயகுமார் லவ் ஸ்டோரி!
இயக்குனர் ஹரி நடிகை ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இங்கு நடிகை ப்ரீத்தா - இயக்குனர் ஹரி காதல் கதை பற்றி பார்க்கலாம்.

Preetha Vijayakumar - Hari Marriage Rare Photos
ப்ரீத்தா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் வெற்றிகரமான நடிகையாக இருந்தார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோருக்கு இரண்டாவது குழந்தை. 2002 இல் இயக்குனர் ஹரியை மணந்த இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
Preetha Vijayakumar
அவர் தனித்துவமான டிரஸ்ஸிங் ஸ்டைலில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ப்ரீத்தா விஜயகுமாரின் போட்டோக்களுக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ப்ரீத்தா இயக்குநர் ஹரியை சென்னையில் சந்தித்திருக்கிறார்.பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்க நட்பு காதலாக மாறியது.
Director Hari
சிறுவயது முதலே அக்கா வனிதாவும் தங்கை ப்ரீத்தாவும் தான் நெருங்கிய நண்பர்கள். எந்தவொரு விஷயம் இருந்தாலும் ப்ரீத்தா, வனிதாவிடம் தான் சொல்லுவாராம். ப்ரீத்தா மற்றும் ஹரி காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு வந்துள்ளது. குறிப்பாக நடிகர் விஜயகுமார் மறுத்துள்ளார்.
Vanitha Vijayakumar
பிறகு இயக்குனர் ஹரி வனிதாவை சந்தித்து எங்களுடைய திருமணத்திற்கு நீங்கள் தான் உதவ வேண்டும் என்று கூற, ஒருகட்டத்தில் விஜயகுமார் குடும்பம் ப்ரீத்தா - ஹரி திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். திருமணத்துக்கு பிறகு தான் ஹரி பிரபல இயக்குனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜமௌலி இல்லை.. ஷங்கர் இல்லை.. இந்தியாவின் பணக்கார திரைப்பட இயக்குனர் இவர்தான்.. யாரு தெரியுமா?