3வது திருமணம் செய்துகொண்ட இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே - வைரல் போட்டோஸ்
தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரிஷ் சால்வே 3வது திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண விழா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரிஷ் சால்வே, ஞாயிற்றுக்கிழமை லண்டனில் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.
ஹரிஷ் சால்வே, மணமகள் ட்ரினாவுடன் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி திருமண விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றனர். சுனில் மிட்டல், எல்என் மிட்டல், எஸ்பி லோஹியா, கோபி ஹிந்துஜா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மற்றும் அவரது காதலியும், மாடலுமான உஜ்வாலா ரவுத் ஆகியோரும் திருமணத்தில் புகைப்படம் எடுத்தனர். 68 வயதான மூத்த வழக்கறிஞருக்கு இது மூன்றாவது திருமணம். அவர் தனது முதல் மனைவி மீனாட்சியை 2020 இல் விவாகரத்து செய்து கரோலின் ப்ராசார்ட்டை மணந்தார்.
உளவு பார்த்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் மீதான விசாரணை உட்பட பல முக்கிய வழக்குகளில் சால்வே பங்கேற்றுள்ளார். நவம்பர் 1999 முதல் நவம்பர் 2002 வரை இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.