OLAவிற்கு வரப்போகுது வலுவான போட்டி.. டிசம்பர் 15ம் தேதி அறிமுகமாகும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - முழு விவரம்!
Simple Dot One : இந்திய சந்தையில் தற்பொழுது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்கள் மத்தியிலும் இவ்வகை வாகனங்களுக்கான வரவேற்பு அதிக அளவில் உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று அறிமுகமாக உள்ளது.
Simple Dot One
ஏற்கனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான OLA தங்களுடைய மின்சார ஸ்கூட்டர்கள் சம்பந்தமாக சில இடையூறுகளை சந்தித்து வரும் இந்த நேரத்தில், அந்த நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக பெங்களூருவை தளமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமான சிம்பிள் எனர்ஜி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
OLA S1 X
வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி அந்த நிறுவனம் தனது சிம்பிள் டாட் ஒன் (Simple Dot One) என்கின்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிட உள்ளது. சுமார் ஒரு லட்சம் ரூபாய் விலையில் வெளியாகும் இந்த பைக்கானது, OLA நிறுவனத்தின் S1 X என்ற வாகனத்திற்கு நேரடி போட்டியாக அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 15ஆம் தேதி இந்த புதிய ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியாகும் அதே தினம், அதற்கான புக்கிங்களும் துவங்கப்படும் என்றும், ஜனவரி 2024 முதல் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த வண்டி டெலிவரி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
New Electric Scooter
சுமார் 3.7 kWh பேட்டரி கொண்ட இந்த சிம்பிள் ஒன் டாட், 151 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக்குகள் இல்லை என்றும் ஆனால் சிபிஎஸ் மற்றும் டிரம் பிரேக் முறைகள் இதில் அமைக்கப்பட்டு இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சஸ்பென்ஷனை பொருத்தவரை டெலிகோபிக் யூனிட் முன்புறத்திலும், பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் முறை அமைக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. டச் ஸ்கிரீனுடன் கூடிய திரை அமைப்பு கொண்ட இந்த வாகனத்தில் எல்இடி விளக்குகளும், சமிக்கி விலக்குகளும் ப்ளூடூத் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு வரக்கூடிய செய்திகள் மற்றும் அழைப்புகளை காட்டும் விதத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.