School College Holiday:இன்று பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்ளுக்கு லீவ்! இது யாருக்கெல்லாம் பொருந்தாது தெரியுமா?
மங்கல தேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Mangala Devi Kannagi Temple Festivel
கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து 14 கி.மீ தொலைவியிலும், தேனி மாவட்டம் பளியன்குடி கிராமத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இந்த கோயில் தமிழக எல்லையில் இருந்தாலும் கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இந்த கோவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
Chithra Pournami
கேரள மாநிலம் குமுளியில் இருந்து பாதுகாக்கப்பட்ட கேரள வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டி பாதை உள்ளது. இந்த பாதை வழியாக இந்த கோயிலுக்கு செல்லலாம். அப்படி இல்லை என்றால் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கி.மீ தூரத்திற்கு நடைப்பாதை வழியாகவும் இந்த கோயிலுக்கு செல்லலாம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று வருடத்தில் ஒருநாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி இன்று திருவிழா நடைபெறுகிறது. ஆகையால் இன்றைய தினம் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Theni Collector Shajeevana,
இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மங்களதேவி கண்ணகி கோயிலின் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமிக்கு மட்டுமே இங்கு செல்ல முடியும்.. கண்ணகி கோயில் வரலாறு தெரியுமா?
Local Holiday
இந்த உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம்-1881 (Negotiable Instruments Act-1881) கீழ் வராது என்பதால், அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன், செயல்படும். மேலும் உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே 4ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.