உங்க செருப்பை நாய்கள் கடித்து குதற என்ன காரணம் தெரியுமா...?
Dogs Bite Slippers : வீட்டில் கழற்றி வைக்கும் செருப்புகளை நாய்கள் கடித்து விளையாடுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அது ஏன் என சிந்தனை செய்திருக்கிறீர்களா? இந்த பதிவில் காணலாம்.
மனிதர்கள் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்க விரும்புவார்கள். அதிலும் மனிதனுடைய முதல் நட்பு விலங்கான நாய்களை வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஆனால் பெரும்பாலும் அவை விளையாட்டு போக்குடன் இருக்கும். இதனால் சில நேரம் நமக்கு எரிச்சல் கூட வரும்.
இரவு நேரத்தில் கார், இருசக்கர வாகனம் என எதில் சென்றாலும், நாய்கள் துரத்தும். குறிப்பாக நாய்கள் செய்வதில் நம்மை அதிகமாக எரிச்சலடைய செய்யும் விஷயம் என்றால், அது அவை செருப்பு, ஷூ ஆகியவற்றை கடித்து குதறிவிடுவதுதான். புது செருப்பு பழைய செருப்பு என நாய்களுக்கு வித்தியாசமும் தெரியாது.
நாய்களின் இப்படி செருப்பை கடித்து குதறும் செயலுக்கு சில காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். நாய்கள் செருப்பு, துணி என சிலருடைய பொருள்களை கடிப்பதற்கு முக்கிய காரணம், அந்த நபர் மீதான அலாதி அன்புதான் காரணமாம். அந்த நபர்களின் மீது இருக்கும் வாசனை பிடித்ததால் அதனை தன்னோடே வைத்து கொள்ள இப்படிப்பட்ட செயலை செய்கின்றன.
நாய்கள் தங்களுக்கு பிரியமானவர்களை தெரிந்தால் வேதனையில் மிகவும் அவதிப்படும். இந்த பிரிவினால் ஏற்படும் வேதனையை சரி செய்யவும் அவை சில நேரங்களில் மனிதர்களின் ஆடைகளையும், செருப்பையும் கடித்து வைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: Heat Strokes In Dogs : நாய்களை தாக்கும் 'ஹீட் ஸ்ட்ரோக்'... இப்படி கவனித்து கொள்ளுங்கள்!
மேலே சொன்ன காரணங்கள் மட்டுமே நாய்கள் செருப்பை கடிக்க காரணமாக இருக்க முடியாது. சில நேரங்களில் அவற்றிற்கு கடுமையான பசி ஏற்பட்டாலும் நம்முடைய செருப்பை கடித்து மென்றுவிடும். சில நாய்களின் வயிற்றில் புழுக்கள் காணப்படும் அதன் காரணமாக கூட அவை செருப்பை கடிக்கலாம்.
இதையும் படிங்க: இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாய் இனங்கள் இவை..!