சென்னையில் இன்று தரமான சம்பவம் இருக்காம்.. வயநாட்டில் எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்!
சென்னையில் சுட்டெரித்த வெயிலுக்கு பிறகு இன்று மழைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
Wayanad landslide
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, மேட்டுப்பட்டி, சூரல்மலையில் கடந்த 30ம் தேதி ஏற்பட்டுள்ள நிலச்சரிவு வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 282க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து கொத்து கொத்தாக உயிரிழந்துள்ளனர். தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Wayanad Landslide News
அங்கு தொடர்ந்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் ராணுவத்தினரும் பேரிடர் மீட்பு குழுவினரும் தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வயல்நாட்டில் மீண்டும் மழை பெய்யுமா என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: RAIN ALERT : அடுத்த 7 நாட்களுக்கு வெளியான அலர்ட்.! தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பா.? வானிலை மையம் தகவல்
Tamilnadu Weatherman
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நேற்று இரவு முதல் வயநாட்டில் மழை இல்லை என்றும் கேரள மாநிலம் முழுவதும் தற்போது தெளிவான வானிலை உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வழக்கமான பருவமழை அவ்வப்போது இடைவெளிவிட்டு தொடரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வயநாடு, நீலகிரி மற்றும் வால்பாறையில் மிக கனமழை ஆபத்து இல்லை. அதேநேரத்தில் சென்னையில் சுட்டெரித்த வெயிலுக்கு பிறகு இன்று மழைக்கு நல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
Chennai Heavy Rain
சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் சூட்டெரித்து வந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.