- Home
- Gallery
- Soori : அப்போ லைட் மேன்.. இப்போ ட்ரெண்டிங் ஆக்ஷன் ஹீரோ - விஸ்வரூப வளர்ச்சி கண்ட சூரி - நெட் ஒர்த் எவ்வளவு?
Soori : அப்போ லைட் மேன்.. இப்போ ட்ரெண்டிங் ஆக்ஷன் ஹீரோ - விஸ்வரூப வளர்ச்சி கண்ட சூரி - நெட் ஒர்த் எவ்வளவு?
Actor SooriNet Worth : இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் விரும்பப்படும் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் பிரபல நடிகர் சூரி என்றால் அது சற்றும் மிகையல்ல.

Soori
Actor Soori Net Worth : மதுரையில் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி பிறந்த நடிகர் தான் ராமலக்ஷ்மணன் முத்துசாமி என்கின்ற சூரி. இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்சன் ஹீரோவாக இவர் மாறி இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
Viduthalai Actor Soori Net Worth
சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக மதுரையில் இருந்து சென்னை வந்த நடிகர் சூரி, தொடக்க காலத்தில் அட்மாஸ்பியர் நடிகராகவும், லைட் மேனாகவும் பயணித்து வந்தார். அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு என்கின்ற திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு காமெடியில் கலக்கிய சூரியன் வாழ்க்கையை மாற்றியது வெற்றி மாறனின் விடுதலை திரைப்படம் என்றே கூறலாம்.
Garudan Actor Soori Net Worth
தொடர்ச்சியாக "கருடன்", "கொட்டு காலி" போன்ற பல வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகர் சூரி. இப்பொழுது ஒரு படத்திற்கு ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். அவரிடம் 60 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.