- Home
- Gallery
- கிரிக்கெட்டின் சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கிரிக்கெட்டின் சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.320 கோடி ஆகும்.

Indian Team Head Coach Rahul Dravid
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 1973 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி பிறந்தவர் ராகுல் டிராவிட். இந்திய அணிக்காக 1996 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் விளையாடி பல சாதனைகளை படைத்திருக்கிறார். விக்கெ கீப்பராகவும், கேப்டனாகவும் இருந்து அணியை சிறப்பாக வழி நடத்தியிருக்கிறார்.
Rahul Dravid Net Worth
பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசஃப் பள்ளியில் பள்ளிப்பட்டிப்பை முடித்த ராகுல் டிராவிட் அதன் பிறகு செயிண்ட் ஜோசஃப் கல்லூரியில் வணிகவியல் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை 12 வயதிலேயே கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளது. மேலும், அண்டர் 15, அண்டர் 17 மற்றும் அண்டர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கர்நாடகா அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.
Rahul Dravid Ranji Trophy
கடந்த 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடகா அணிக்காக விளையாடினார். டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடிய ராகுல் டிராவிட்டின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடி ஆகும்.
Rahul Dravid
மேலும், பிராண்ட் ஒப்பந்தங்கள், வர்ணனைப் பணிகள் மற்றும் பயிற்சி பொறுப்பு ஆகியவற்றின் மூலமாக ராகுல் டிராவிட் பெற்ற வருமானம் குறிப்பிடத்தக்க வகையில் அவரது வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் ஆண்டு வருமானம் ரூ.5 கோடி. இது தவிர தேசிய கிரிக்கெட் அகாடமியில் செயல்பாட்டு தலைவராக பணியாற்றும் டிராவிட்டுக்கு மாத சம்பளமாக ரூ.60 லட்சம் வழங்கப்படுகிறது.
Rahul Dravid Car Collection
பெங்களூருவில் உள்ள இந்திரா நகரில் ராகுல் டிராவிட் ரூ.4 கோடி மதிப்பில் ஆடம்பரமான சொகுசு வீடு ஒன்று வைத்துள்ளார். ரூ.80 லட்சம் மதிப்பில் மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்இ, ரூ.72 லட்சம் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ரூ.55 லட்சம் மதிப்பில் ஆடி க்யூ 5 எஸ்யூவி கார் என்று பல கார்கள் வைத்திருக்கிறார்.
Rahul Dravid Cricket Life
இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அதில் முக்கியமானது 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கென்யா அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து 237 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளார். இதில் டிராவிட் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
Rahul Dravid Cricket Career
இதே போன்று 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் விவிஎஸ் லட்சுமணன் உடன் இணைந்து 376 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துக் கொடுத்துள்ளார். இதில் டிராவிட் 180 ரன்கள் எடுத்தார்.
Rahul Dravid Salary
இதைவிட அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் விவிஎஸ் லட்சுமணன் உடன் இணைந்து 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துக் கொடுத்துள்ளார். இதில் டிராவிட் 233 ரன்கள் எடுத்துள்ளார்.
Rahul Dravid Awards
விருதுகள்:
1998 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்ததற்காக அர்ஜூனா விருது பெற்றார்.
2004 ஆம் ஆண்டு இந்திய குடியரசின் 4ஆவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.
2004 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் வீரர் விருது பெற்றார்.
2012 ஆம் ஆண்டு டான் பிராட்மேன் விருது பெற்றார்.
2013 ஆம் ஆண்டு இந்திய குடியரசின் 3ஆவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்றார்.
Rahul Dravid Net Worth
டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வீரரும் செய்யாத அறிய சாதனையை ராகுல் டிராவிட் மட்டுமே படைத்துள்ளார். அதிக நேரம் நின்று அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 31,258 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் டிராவிட் 44,152 நிமிடங்கள் வரையில் மைதானத்தில் நின்றுள்ளார். இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு ஐசிசி ஹால் ஆஃப் தி ஃபேம் விருது கொடுத்தது.