- Home
- Gallery
- என்னடா இது கொடுமையா இருக்கு – இன்னும் போட்டி கூட முடில, அதுக்குள்ள KKR vs SRH IPL 2024 Final பேனரால் சர்ச்சை!
என்னடா இது கொடுமையா இருக்கு – இன்னும் போட்டி கூட முடில, அதுக்குள்ள KKR vs SRH IPL 2024 Final பேனரால் சர்ச்சை!
2ஆவது குவாலிஃபையர் போட்டி தற்போது நடந்து வரும் நிலையில் சேப்பாக்கத்தில்சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் பேனர் ஐபிஎல் இறுதிப் போட்டி என்று வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

IPL 2024 Final Banner
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இறுதி போட்டியை நெருங்கிவிட்டது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக சென்றுள்ளது. 2ஆவது அணிக்கான போட்டி தற்போது சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
IPL Final 2024
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அப்படியிருக்கும் போது ஹைதராபாத் வெற்றி பெற்றுவிட்டது என்று கூறுவது போன்று சேப்பாக்கத்தில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளின் கேப்டன்களின் புகைப்படங்கள் இறுதிப் போடிக்கான பேனரில் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
IPL 2024
சேப்பாக்கம் மைதானத்தின் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் பேனரில் ஒரு பக்கம் பேட் கம்மின்ஸ் புகைப்படமும், மற்றொரு பக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் புகைப்படமும் இறுதிப் போட்டிக்கான பேனர் என்று வைக்கப்பட்டுள்ளது.
Chepauk Stadium IPL Final 2024
சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளின் கேப்டன்களின் பேனர்கள் இடம் பெற்றுள்ளது.
KKR vs SRH IPL 2024 Final Banner
மேலும் சமூக வலைதள பக்கத்தில் அந்த பேனர் புகைப்படத்தை பதிவிட்டு ஸ்கிரிப்ட் என்று குறிப்பிட்டு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா புகைப்படத்தை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் குவாலிஃபையர் 2 சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.