மைலேஜ் பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. சிறந்த மைலேஜ் ஸ்கூட்டர்கள்.. ரூ.80 ஆயிரம் கூட இல்லைங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் எந்தவொரு வாகனம் வாங்க விரும்பினால், அவர்களின் விருப்பப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மைலேஜ். அதிகம் மைலேஜ் தரக்கூடிய 5 ஸ்கூட்டர்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
Best Mileage Scooters
யமஹா பாசினோ 125 எப்ஐ (Yamaha Fascino 125 Fi) ஸ்கூட்டரின் டிரம் வேரியன்ட் 80 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும். இந்த மாடலின் விலை ரூ.79,900 (எக்ஸ்-ஷோரூம்). இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டரில் 50 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் என்று கூறப்படுகிறது.
Top Mileage Scooter in India
டிவிஎஸ் ஜுபிடர் (TVS Jupiter) ஸ்கூட்டரின் விலை ரூ.73,340 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இந்த ஸ்கூட்டரின் SMW மற்றும் அடிப்படை வேரியண்ட் 80 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும். இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலில் 50 கிலோமீட்டர் வரை ஓடக்கூடியது.
Budget Mileage Scooters
ஹீரோ பிளேசர் ப்ளஸ் எக்ஸ்டெக் (Hero Pleasure Plus XTec) ஸ்கூட்டரின் விலை ரூ.71,213 முதல் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது மொத்தம் 4 வகைகளில் வாங்க முடியும். 110.9 சிசி சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் லிட்டருக்கு சுமார் 50 கிலோமீட்டர் மைலேஜ் தரும்.
Mileage Scooter
சுசுகி ஏசஸ் (Suzuki) ஸ்கூட்டர் மிகவும் பிரபலமானது ஆகும். இந்த ஸ்கூட்டர் 4 வகைகளில் கிடைக்கிறது. ஆனால் இந்த ஸ்கூட்டரின் நிலையான பதிப்பு டிரம் பிரேக் வேரியண்ட் 80 ஆயிரத்திற்கும் குறைவாகவே கிடைக்கும். இந்த மாடலின் விலை ரூ.79,899 (எக்ஸ்-ஷோரூம்).இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலில் 45-50 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது.
Highest Mileage Scooters
ஹோண்டா ஆக்டிவா 6ஜியின் ஆரம்ப விலை ரூ.76,234 (எக்ஸ்-ஷோரூம்). 109.5 சிசி பெட்ரோல் எஞ்சினுடன், இதன் வெளியீடு 7.7bhp/ 8.9Nm ஆகும். இந்த ஸ்கூட்டரின் மைலேஜ் லிட்டருக்கு 45 கிமீ ஆகும்.
330 கிமீ வரை மைலேஜ்.. உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. பஜாஜின் ஃப்ரீடம் 125.. விலை ரொம்ப கம்மி!