தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த 4 ட்ரிங்க்ஸ் குடிச்சு பாருங்க.. நோய் வராம ஆரோக்கியமாக இருப்பீங்க!!
Healthy Drink In Empty Stomach : தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ஆரோக்கியமான 4 பானங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பெரும்பாலானோர் தங்களது நாளை டீ அல்லது காபியுடன் தான் தொடங்குகிறார்கள். ஆனால், வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில், அவற்றில் காஃபின் இருப்பதால் அது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பினால், தினமும் காலை ஆரோக்கியமான பானத்துடன் உங்களது நாளை தொடங்குங்கள்.
ஆனால், காலையில் வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பானமாக என்ன குடிக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் குழப்பத்தில் இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே ஆரோக்கியமான பானத்தை தயாரித்து குடிக்கலாம். இந்த ஆரோக்கியமான பானத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், அவை நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். எனவே, இன்றைய கட்டுரையில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ஆரோக்கியமான 7 பானங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
சீரகம் அல்லது பெருஞ்சீரகம் தண்ணீர்: நீங்கள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சீரகம் அல்லது பெருஞ்சீரகம் தண்ணீரை குடித்து உங்களது நாளை தொடங்குங்கள். இந்த நீர் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் செரிமானத்தை துரிதப்படுத்தும் மற்றும் நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
இலவங்கப்பட்டை டீ: நீங்கள் காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ குடிக்க விரும்பினால் இலவங்கப்பட்டை டீ குடியுங்கள். ஏனெனில், இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது. மேலும் இது உடலில் இருக்கும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, பிசிஒஎஸ் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
துளசி டீ: தினமும் காலை பால் டீ-க்கு பதிலாக, வெறும் வயிற்றில் துளசி இட்லி குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக இந்த டீ இருமல் சளிக்கு அருமருந்து ஆகும். துளசியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் நோய் தொற்றின் அபாயத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
தேங்காய் நீர்: தினமும் காலை வெறும் வயிற்றில் தேங்காய் நீர் குடித்து வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், நீரேற்றத்துடனும் இருப்பீர்கள். இந்த நீரில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.