ஆதிக் ரவிச்சந்திரனை விட பிரபு மகள் ஐஸ்வர்யா இத்தனை வயது மூத்தவரா? வெளியான ஷாக்கிங் தகவல்
நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

Adhik Aishwarya wedding
ஜிவி பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லேனா நயன்தாரா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கிய முதல் படமே அடல்ட் படமாக இருந்ததால் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அப்படம் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆதிக் அடுத்ததாக இயக்கிய திரைப்படம் சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்.
Rajini at Adhik Aishwarya wedding
முதல் படம் எந்த அளவு வெற்றி அடைந்ததோ, அந்த அளவு தோல்வி படமாக இது அமைந்தது. பின்னர் பஹீராவும் பிளாப் ஆனதால் என ரூட் மாறிச்சென்ற ஆத்விக்கிற்கு அஜித் கொடுத்த அட்வைஸ் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பெரிய நடிகர்களுடன் படம் பண்ணுமாரு அஜித் சொன்னதும் மார்க் ஆண்டனி படத்தை விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து செம்ம மாஸாக எடுத்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார் ஆதிக்.
Suriya at Adhik Aishwarya wedding
அப்படம் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்ததால், தன்னுடைய அடுத்த படமான ஏகே 63 படத்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக்கிற்கு வழங்கி இருக்கிறார் அஜித். மார்க் ஆண்டனி வெற்றி, அஜித் பட வாய்ப்பு என சினிமாவில் ஆதிக்கிற்கு இந்த ஆண்டு ஸ்பெஷலான ஒன்றாக அமைந்ததை போல பர்சனல் வாழ்க்கையிலும் அவருக்கு மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்துள்ளது. 32 வயதாகும் ஆதிக்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
SJ suryah at Adhik Aishwarya wedding
நடிகர் சிவாஜியின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யா பிரபுவை காதலித்து கரம்பிடித்து உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இது ஆதிக்கிற்கு முதல் திருமணமாக இருந்தாலும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். அவருக்கு ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு தனது அத்தை மகன் குணால் என்பவருடன் திருமணம் ஆனது. பின்னர் சொத்து பிரச்சனை காரணமாக கும்பம் பிரிந்ததால், அவர்களும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
vishal at adhik Aishwarya wedding
குணால் உடனான விவாகரத்துக்கு பின்னர் கேம் மேக்கிங் கம்பெனி ஒன்றை நடத்தி வந்த ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் ஆதிக்கிற்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த டிசம்பர் 15-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது திருமணத்தில் ரஜினி, கமல் தொடங்கி விஷால் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் ஆதிக்கை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர் என்கிற தகவல் தெரியவந்துள்ளது. ஆதிக்கிற்கு தற்போது 32 வயதாகும் நிலையில், அவரது மனைவி ஐஸ்வர்யா அவரை 3 வயது மூத்தவர் என கூறப்படுகிறது. தற்போது பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கு 35 வயது ஆகிறதாம்.
இதையும் படியுங்கள்... நயன்தாராவை விட டபுள் மடங்கு சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜோதிகா - அவரின் Net worth இவ்வளவா?