- Home
- Gallery
- ஏதோ 1 லட்சம் தருவாருனு நினச்சேன்.. ஆனா.. உயிருக்கு போராடிய பொன்னம்பலம் - உதவிக்கரம் நீட்டிய "Super Star"!
ஏதோ 1 லட்சம் தருவாருனு நினச்சேன்.. ஆனா.. உயிருக்கு போராடிய பொன்னம்பலம் - உதவிக்கரம் நீட்டிய "Super Star"!
Actor Ponnambalam : சிறு வயது முதலிலேயே கோலிவுட் உலகில் ஸ்டண்ட் மேனாக பணியாற்றி, அதன் பிறகு முக்கிய வில்லனாக உருவெடுத்தவர் தான் பிரபல நடிகர் பொன்னம்பலம்.

Muthu movie
தமிழ் சினிமாவில் கடந்த 1988ம் ஆண்டு வெளியான "கலியுகம்" என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய பொன்னம்பலம், தொடர்ச்சியாக பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.
Actor Ponnambalam
குறிப்பாக தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக அளவில் வில்லனாகவும், ஸ்டண்ட் மேனாகவும் நடித்துள்ள பொன்னம்பலம், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கலைத்துறையில் பயணித்து வருகிறார்.
villain ponnambalam
சில வருடங்களுக்கு முன்பு பொன்னம்பலம் மிகவும் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டு, உடல்நலம் குன்றிய நிலையில், மருத்துவ செலவைக் கூட கவனிக்க முடியாத நிலைக்கு அவர் சென்றார். அந்த நேரத்தில் அவருக்கு பல நடிகர்கள் உதவிக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
Chiranjeevi
இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி செய்த உதவி குறித்து மனம் திறந்துள்ள பொன்னம்பலம், தனது உடல்நிலை குறித்து அவரிடம் கூறியபோது, ஏதோ ஒன்று அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் கொடுப்பார் என்று தான் எண்ணியதாகவும். ஆனால் அந்த மருத்துவமனையில் தனக்கான 2000 ரூபாய் அட்மிஷன் பீஸ் தொடங்கி, ஒட்டுமொத்த மருத்துவ செலவையும் அவரே ஏற்று, சுமார் 40 லட்சம் ரூபாய் தனக்காக சிரஞ்சீவி செலவிட்டதாக கண்கலங்கி பேசியிருக்கிறார் பொன்னம்பலம்.