- Home
- Gallery
- இதெல்லாம் ஒரு டயலாக்கா? பவன் கல்யாண் படம் பற்றி குறை பேசிய பிரகாஷ் ராஜ் - கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
இதெல்லாம் ஒரு டயலாக்கா? பவன் கல்யாண் படம் பற்றி குறை பேசிய பிரகாஷ் ராஜ் - கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
Prakash Raj : நடிகர் பிரகாஷ் ராஜ், பிரபல நடிகர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களின் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

iruvar
இந்திய மொழிகள் பலவற்றுள் நடித்துள்ள பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய மூன்று மொழிகளில் 5 தேசிய விருதுகள் வென்ற மிகச்சிறந்த நடிகர் என்பது பலர் அறியாத உண்மை. மணிரத்தினத்தின் "இருவர்" திரைப்படத்திற்காக தான், பிரகாஷ்ராஜ் முதல் முதலில் தேசிய விருது பெற்றார். தமிழ் திரை உலகில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் கடந்த 1988ம் ஆண்டு முதல் பயணித்து வருகிறார்.
Gilli
கன்னட மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமான இவர், தமிழில் 1994ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான "டூயட்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் திரையுலகில் பிரகாஷ்ராஜுக்கு இருக்கும் அதே வரவேற்பு, தெலுங்கு திரை உலகிலும் பெரிய அளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, பவன் கல்யாண் போன்ற பலருடனும் அவர் இணைந்து நடித்திருக்கிறார்.
Prakash raj in politics
இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான "சுஸ்வாகதம்" என்ற படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு குறித்து பேசியுள்ளார் பிரகாஷ் ராஜ். "சுஸ்வாகதம்" என்ற அந்த திரைப்படத்தை இயக்கியது சீனிவாச ராவ். அந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு கொடுக்கப்பட்ட நீண்ட வசனம் ஒன்று அவருக்கு பிடிக்காமல் போக, இது எப்படி திரையில் ஒர்க் அவுட் ஆகும்? என்று கூறி அந்த டயலாக்கை பேச தான் மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
Pawan kalyan
ஒரு கட்டத்தில் இயக்குனர் சொல்வதை தட்டமுடியாமல், அரை மனதோடு அந்த வசனத்தை பேசி, படத்தில் நடித்து முடித்துள்ளார். 1998ம் ஆண்டு புத்தாண்டுக்கு அந்த படம் வெளியாகிறது, டோலிவுட் உலகமே கொண்டாடும் அளவிற்கு சூப்பர்ஹிட்டா மாறுகிறது, அதுமட்டுமல்லாமல் பிரகாஷ் ராஜ் பேசிய வசனங்களை, ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாட, தான் செய்த தவறை புரிந்துகொண்ட Prakash Raj, இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சொகுசு காரை வாங்கிய நடிகர் ராம் சரண்.. அதன் விலை இத்தனை கோடியா?