MK STALIN :அமெரிக்கா செல்லும் முன் முக்கிய முடிவு எடுக்கப்போகும் ஸ்டாலின்.! இன்று வெளியாகுமா புதிய அறிவிப்பு.?
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். இதற்கு முன்பாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
CM stalin
தமிழக அமைச்சரையில் மாற்றம் வருமா.?
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 3ஆண்டுகள் நிறைவடைந்து 4ஆம் ஆண்டை நோக்கி சென்றுகொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பெரிய அளவில் தமிழக அமைச்சரவை மாற்றம் இதுவரை செய்யப்படவில்லை. மற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் வெளிநாடு பயணம்
அந்த வகையில் சுதந்திர தினம் முடிந்த பின்னர் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது ஆகஸ்ட் 19ஆம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி அமெரிக்க செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் கூகுள் நிறுவன செயல் அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டம்
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும், தமிழ் புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம்உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Breaking: சவுக்கு சங்கரை விடாது துரத்தும் தமிழக அரசு? மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்கு
udhayanidhi
உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் அமைச்சர்கள் மட்டுமின்றி திமுக நிர்வாகிகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது எனவே இன்றைய கூட்டத்தில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என அமைச்சர்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.