இந்த வீடியோவுல அவங்க பண்ற மாதிரி நம்மளும் பண்ணலாமா?ஆபாச வீடியோவை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.!
அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த 52 வயது ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராமாநிலம் கோண்டியா மாவட்டத்தில் டாங்கோர்லி பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் 52 வயது ஆசிரியர் 5-ம் வகுப்பு மாணவிகள் 8 பேருக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், கண்ட கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மாணவிகள் நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக தலைமை ஆசிரியருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையை தொடர்ந்து ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், ஆசிரியருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆபாச வீடியோக்களை காண்பித்து ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.