பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர உல்லாசம்! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்! நடந்தது என்ன?
ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (25). வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் படித்து வரும் 15 வயதுடைய பள்ளி மாணவியை கடந்த சில மாதங்களாக காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று குடியாத்தத்தில் உள்ள கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர், அவரது வீட்டிற்கு செல்லாமல் நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
rape
அப்போது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலையில் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் மாணவியை அழைத்துச்சென்று சிறிது நேரத்தில் வருகிறேன் என கூறிவிட்டு விஸ்வநாதன் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவி தனது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, சிறுமியை மீட்ட பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த விஸ்வநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.