- Home
- Cinema
- பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்த விஜய்... ‘மாஸ்டர்’ ஒட்டுமொத்த கலெக்ஷன் இவ்வளவு கோடியா?
பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்த விஜய்... ‘மாஸ்டர்’ ஒட்டுமொத்த கலெக்ஷன் இவ்வளவு கோடியா?
தற்போது 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஒட்டுமொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

கொரோனா பீதியில் இருந்த மக்களை தியேட்டரை நோக்கி வரவைத்த பெருமை மாஸ்டர் படத்திற்கு கிடைத்தது. கடைசி நேரத்தில் தமிழக அரசு வழங்கிய 100 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட போதும், 50 சதவீத ஆக்குபன்ஸியில் படம் பட்டையைக் கிளப்பியது.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது.அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியான போதும், தியேட்டர்களில் 70 சதவீத பார்வையாளர்களுடன் ஓடிக்கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் வாரத்திலேயே ஹாலிவுட் பட கலெக்ஷனை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர் திரைப்படம், தற்போது 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஒட்டுமொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

தமிழ்நாடு -ரூ.139 கோடி, கேரளா - ரூ.13 கோடி, கர்நாடகா - ரூ.17 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் - ரூ.28.5 கோடி, வட இந்தியாவில் - ரூ.3 கோடி என இந்தியா அளவில் மட்டுமே மாஸ்டர் திரைப்படம் ரூ.200.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. உலக அளவில் மொத்தம் 242.5 கோடி ரூபாய் வரை மாஸ்டர் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.