பாலிவுட்டையே மிரள வைத்த சூர்யா, நயன்தாரா... ஓடிடி தளத்தில் பட்டையைக் கிளப்பி சாதனை...!
First Published Nov 25, 2020, 4:08 PM IST
தீபாவளி விருந்தாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 12ம் தேதி வெளியான சூரரைப் போற்று திரைப்படம் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

ச்சே... மனுஷன் என்னமா உருக வச்சியிருக்காருய்யா? என ரசிகர்களில் ஆரம்பித்து சக நடிகர்கள் வரை கண் கலங்க வைத்திருக்கும் படமாக அமைத்திருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இதில் கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?