என்ன நடக்கிறது? அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த எஸ்.பி.பி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள்!
எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக நேற்று மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அவருடைய குடும்பத்தினர் மற்றும் இயக்குனர் பாரதி ராஜா, வெங்கட் பிரபு போன்ற திரைபிரபலங்கள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளதால், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கொரோனாவில் இருந்து மீண்டு, நன்கு உடல்நிலை தெரிவந்ததாக கூறப்பட்ட எஸ்.பி.பி உடல் நிலை கடந்த 24 மணிநேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாக, அவர் சிகிச்சை பெற்று வரும் Mgm மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து சிறப்பு மருத்துவ குழுவினர் எஸ்.பி.பி உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
எக்மோ, வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளுடன் எஸ்.பி.பி தொடர் சிகிச்சையில் இருந்தாலும், அவருடைய உடல்நிலை கவலை கிடமாகவே உள்ளதாக தற்போது வரை வெளியாகியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் எஸ்.பி.பி. நலம் பெற வேண்டி வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும் மருத்துவ குழுவினர் எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி.சரணிடம் அடுத்தக்கட்ட சிகிச்சை குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
எஸ்.பி.பி.யின் தற்போதைய உடல் நிலை மற்றும் அடுத்து என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கலாம் என சரணிடம் விளக்கி வருகிறார்களாம். மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள தலைசிறந்த மருத்துவர்களுடனும் காணொலி மூலமாக அறிவுரைகள் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, அவரச அவசரமாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகள், மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனை விரைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இயக்குனர் பாரதி ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்களும் தொடர்ந்து மருத்துவமனைக்கு படையெடுத்து வருவதால் என்ன நடக்கிறது என்பது புரியாமல் பரபரப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
மேலும் இயக்குனர் பாரதி ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்களும் தொடர்ந்து மருத்துவமனைக்கு படையெடுத்து வருவதால் என்ன நடக்கிறது என்பது புரியாமல் பரபரப்பில் உள்ளனர் ரசிகர்கள்.