- Home
- Cinema
- Sivaangi Buys a New Car : புதிய கார் வாங்கிய ஷிவாங்கிக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து மழை – மக்களால் நான் இதெல்லாம் சாத்தியம்!
Sivaangi Buys a New Car : புதிய கார் வாங்கிய ஷிவாங்கிக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து மழை – மக்களால் நான் இதெல்லாம் சாத்தியம்!
Sivaangi buys a brand new Hyundai Creta car : தொகுப்பாளரும், பாடகியுமான ஷிவாங்கி, புதிதாக ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

ஷிவாங்கி கார் புகைப்படம்
Sivaangi buys a brand new Hyundai Creta car : பிரபல தொகுப்பாளரும், பின்னணி பாடகியுமான ஷிவாங்கி புதிதாக ஹூண்டாய் கிரெட்டா கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் ஷிவாங்கி. இதைத் தொடர்ந்து ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் மூலமாக ஷிவாங்கி இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமானார். இந்த ரிலியாட்டி ஷோக்களின் ஷிவாங்கி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பலவிதமான கெட்டப்புகளை போட்டு நடித்துள்ளார். இவ்வளவு ஏன், வடிவேலுவின் 23ஆம் புலிகேசி பட கெட்டப் ஷிவாங்கிற்கு கெச்சிதமாக பொருந்தியது. மேலும், கைப்புள்ள கதாபாத்திரம் என்று வடிவேலுவின் பல கெட்டப்புகளை ஏற்று தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
ஷிவாங்கி புதிய கார் விலை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று சிவகார்த்திகேயனின் டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசேதான் கடவுளடா, ஷாட் பூட் த்ரீ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரௌடி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இது தவிர டாப் குக்கு டூப் குக்கூ சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்த நிலையில் தான் புதிதாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது அப்பா மற்றும் அம்மாவுடன் கார் ஷோரூமிற்கு சென்று புதிதாக ஹூண்டாய் கிரெட்டா என்ற வெள்ளை நிற காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ.13 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஷிவாங்கி ஹூண்டாய் க்ரெட்டா
இது குறித்து ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிபொங்க கூறியிருப்பதாவது: என்னுடைய முதல் காரை வாங்கினேன். இது சாத்தியமற்றது என்று நினைத்த 15 வயது ஷிவாங்கி இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாள். இதைச் சாத்தியமாக்கிய என் பெற்றோர், குருக்கள், கடவுள்கள் மற்றும் பிரபஞ்சத்திற்கு நன்றி. மேலும், மக்களே, நீங்கள் இல்லாமல் நான் ஒன்றுமில்லை! நீங்கள் ஒவ்வொரு முறையும் என்னைத் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தீர்கள். என்னுடைய நலம் விரும்பிகள் மற்றும் மக்கள் அனைவருக்கும் நன்றி என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.