பளபளக்கும் பட்டுப் புடவை.... ஜொலி ஜொலிக்கும் நகைகள்... அழகில் அசத்தும் ஷெரின்... ரசிகர்களை தெறிக்கவிட்ட புகைப்படங்கள்...!

First Published Nov 21, 2019, 6:06 PM IST

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரினின் தோற்றம் நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டது. எப்படி நாளுக்கு நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்குமோ, அதே போலஷெரினின் உடல் எடையும் குறைய ஆரம்பித்தது. சரியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து, பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின் செம்ம ஸ்லீம்மாக க்யூட்டாக காட்சியளித்தார். இப்போ மீண்டும் ஓவராக இளைத்து ஸ்லீம்மாகி ஹீரோயின் லுக்குக்கு மாறியுள்ள ஷெரின் கறுப்பு நிற பட்டுப்புடவையில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.  

அழகான பட்டுப்புடவையில் க்யூட்டாக ஜொலிக்கும் ஷெரினின் புகைப்படங்கள் இதோ...