தளபதி 66..சூப்பர் அப்டேட் கொடுத்த சரத்குமார்..என்ன சொன்னார் தெரியுமா?
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் தளபதி அறுபத்தி ஆறு படம் குறித்து சமீபத்தில் சரத்குமார் அளித்துள்ள பேட்டியில் தற்போது வைரலாகி வருகிறது.

beast
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி மாஸ் காட்டிய படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். முன்னதாக மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் இந்த படத்தில் நடித்திருந்தார். இதில் பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன் விடிவி கணேஷ் யோகிபாபு என பல நட்சத்திரங்கள் உடனிருந்தனர்.
beast
கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் என்னும் பெயரைப் பெற்ற பீஸ்ட் நல்ல பாக்ஸ் ஆபீஸ் ரேட்டிங் பெற்று கொடுத்தது.
மேலும் செய்திகளுக்கு...samanth beatuy tips : சமந்தா அழகிற்கு இதுதான் காரணமா?..வெளியானது நாயகியின் ரகசியம்..
vijay 66
இதையடுத்து விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்துள்ளார். தில் ராஜு தயாரித்து வரும் இந்த படத்தில் நாயகியாக தெலுங்கு நாயகி ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர் முன்னதாக சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த புஷ்பா படத்தில் நாயகியாக வந்திருந்தார்
vijay 66
தளபதி 66 படத்தில் சரத்குமார், ஷாம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளனர். ஃபேமிலி சென்டிமென்ட் மையமாக கொண்டுள்ள இந்த படத்தில் சரத்குமார் விஜய்யின் தந்தையாக நடிக்க உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?..விஜய் 66 நியூ அப்டேட்..
vijay 66
இரு அண்ணன்களுக்கு தம்பியாக விஜய் நடிக்கும் இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் எமோஷன், சென்டிமென்ட் என குடும்ப படமாக இது உருவாக உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.
vijay 66
இந்த படத்தின் முதற் கட்ட படபிடிப்பு அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் 4 நாட்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது. இதை முன்னிட்டு விஜய் தவிர மற்ற நட்சத்திரங்கள் அங்கு சென்று விட்டனராம்.
vijay 66
இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என ஒரு தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் தளபதி அறுபத்தி ஆறு படம் குறித்த சுவாரஸ்யத் தகவலை கூறியுள்ளார்.
vijay 66
தளபதி அறுபத்தி ஆறு படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதத்துக்குள் ஷூட்டிங் முடிந்துவிடும் என எதிர்பார்ப்பதாகவும், தளபதி66 படத்தின் கதை மிகவும் ஃபவர் புல்லானது, அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும் படியாக இந்த ஸ்கிரிப்ட் அமைந்துள்ளது என்றும், விஜயுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.