ஓவர் மேக்கப்... டல்லடிக்கும் லிப்ஸ்டிக்... பஞ்சு மிட்டாய் மிளிரும் ஆல்யா மானசா...!
குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகுடன் மிளிரும் ஆல்யா மானசா தற்போது பஞ்சு மிட்டாய் கலர் பாவாடை தாவணியில் அம்சமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.
இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் எதிர்ப்பு காரணமாக ரகசியமாக திருமணம் நடந்தாலும், 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு குண்டான ஆல்யா மானசா கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையைக் கணிசமாக குறைத்தார்.
தற்போது ஸ்லிம் லுக்கில் செம்ம யங்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். சீரியலுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து தற்போது அரை மணி நேரமாக இருந்த ஒளிபரப்பு நேரம் ஒரு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கோங்க.
சீரியல், நிகழ்ச்சிகள், மாடலிங் என படு பிசியாக இருந்தாலும், சோசியல் மீடியாவில் தினமும் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகுடன் மிளிரும் ஆல்யா மானசா தற்போது பஞ்சு மிட்டாய் கலர் பாவாடை தாவணியில் அம்சமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
கொஞ்சம் ஓவர் மேக்கப்புடன் ஜிகு ஜிகுவென மின்னும் பாவாடை தாவணி, பளீச்சென ஜொலிக்கும் வெள்ளை கற்கள் பதித்த நகைகளை அணிந்து கொண்டு மிளிருகிறார் ஆல்யா மானசா.
ஸ்லிம் லுக்கில் செமையாக இருக்கும் ஆல்யாவின் இந்த போட்டோஸைப் பார்த்த ரசிகர்களோ உங்களுக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது என்றால் நம்ப முடியவில்லை என புகழ்ந்து வருகின்றனர்.